கூடுதல் வரதட்சணை கேட்டு இளம்பெண்ணை கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்த ஐவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
கடலூர் மாவட்டம் சிறுபாக்கத்தை சேர்ந்தவர் ஆர்த்.தி இவருக்கு நாமக்கல் மாவட்டம் எருமை பட்டியை சேர்ந்த பிரேம்குமார் என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் திருமணமான மறுநாளிலிருந்து பிரேம்குமாரின் குடும்பத்தினருக்கு வரதட்சணையாக கொடுக்கப்பட்ட நகைகளை போட்டு தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து தினமும் கூடுதல் வரதட்சணை கேட்டு மாமனார் குடும்பத்தினர் ஆர்த்தியை தொல்லை செய்து வந்துள்ளனர். இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் பெங்களூர் சென்று வசித்து வந்தனர். இதற்கிடையில் ஆர்த்தி கர்ப்பம் அடைந்தார்.
இதனை அறிந்த கணவன் பிரேம்குமார் மற்றும் அவரது தாய் தந்தை உறவினர்கள் ஆர்த்தியிடம் பெற்றோர் வீட்டில் இருந்து கூடுதல் வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்துள்ளனர். மேலும் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று கட்டாய கருக்கலைப்பு செய்துள்ளனர்.
இது குறித்து ஆர்த்தி அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த விருதாச்சலம் காவல்துறையினர் அவர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.