மதுரை:
கிராமங்களில் கோயில் திருவிழாவில் கலை நிகழ்ச்சிக்கு செலவிடும் பணத்தில் நீர் நிலைகளை தூர்வாருங்கள் என்று மதுரை கிளை நீதிபதி ஆர்.தாரணி யோசனை தெரிவித்துள்ளார்.
பல்வேறு கிராமங்களில் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஆடல், பாடல் மற்றும் கலை நிகழ்ச்சிகளுக்கு அனுமதி கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்டு இருந்த மனுக்களை விசாரித்த நீதிபதி ஆர்.தாரணி, இந்த மனுக்களுக்கு அனுமதி வழங்க முடியாது என்று கூறினார்.
மேலும், கோயில் திருவிழாவில் கலை நிகழ்ச்சிக்கு செலவிடும் பணத்தில் நீர் நிலைகளை தூர்வாருங்கள் என்று யோசனை கூறினார்.