சிட்டுக் குருவி இனம் அழிவை தடுக்கும் முயற்சி: தோழியின் திருமணத்தில் வித்தியாசமான பரிசளித்த சக மாணவர்கள்

மதுரையில் தங்களுடன் படிக்கும் கல்லூரி தோழியின் திருமணவிழாவில் கலந்து கொண்டவர்களுக்கு சக மாணவர்கள் பறவைகள் பாதுகாப்பு விழிப்புணர்வுக்காக சிட்டுக்குருவிகூட்டினை பரிசாக வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை கோரிப்பாளையம் அமெரிக்கன் கல்லூரியில் முதுகலை விலங்கியல் படிக்கும் மாணவி குரு தீபிகா. இவருக்கும் வேணுகோபால் என்பவருக்குமான திருமண விழா நேற்று மதுரை திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் மணமகளான கல்லூரி மாணவி குரு தீபிகாவின் கல்லூரி நண்பர்கள், சக மாணவர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

திருமணவிழாவில் கலந்துகொண்ட மணமகளுடன் பயிலும் சக மாணவர்கள் சற்று வித்தியாசமான முறையில் விழாவில் பங்கேற்றவர்களுக்கு குருவிக்கூட்டினை பரிசாக வழங்கினர்.
மாணவர்களின் பறவைகள் பாதுகாப்பிற்காக குருவிகூட்டினை வழங்கிய இந்த சம்பவம் திருமணத்திற்கு வந்தவர்களிடையே ஆச்சரியத்தையும், நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

விலங்கியல் துறையில் பயிலும் மாணவியின் திருமணத்தில் சிட்டுக் குருவி இனம் அழிவை தடுத்து அந்த இனத்தை பாதுகாப்பதற்காக இது போன்ற முயற்சியை மேற்கொண்டதாக மாணவர்கள் தெரிவித்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.