சியோமி-யின் புதிய தலைவர் ஆல்வின் சே.. யார் இவர் தெரியுமா..?

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் யாரும் அடைய முடியாத வளர்ச்சியை மிகவும் குறைந்த காலத்திலேயே எட்டியுள்ள சியோமி கடந்த சில மாதங்களாகவே தலைமை அதிகாரி இல்லாமல் இயங்கி வந்த நிலையில் தற்போது புதிய அதிகாரியை நியமித்துள்ளது சீனாவின் சியோமி நிர்வாகம்.

3 ஆண்டுகளில் 6000 புதிய கிளைகள்: எச்டிஎஃப்சி வங்கி திட்டம்

யார் இந்த ஆல்வின் சே..? இதற்கு முன்பு இப்பதவியில் இருந்த மனு குமார் ஜெயின் என்ன செய்கிறார்..?

 சியோமி

சியோமி

இந்தியாவில் சீன பிராண்டான சியோமி நிறுவனத்தின் வளர்ச்சிக்கு மிக முக்கியக் காரணமாக இருந்தது இந்நிறுவனத்தின் தயாரிப்புகளின் தரம் மற்றும் குறைவான விலை தான். ஆனால் இந்நிறுவன பொருட்களைச் சரியான நேரத்தில், சரியான முறையில் வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்த்தால் மட்டுமே வெற்றி அடைய முடியும்.

 மனு குமார் ஜெயின்

மனு குமார் ஜெயின்

இந்த முக்கியமான பணியைச் செய்தவர் தான் மனு குமார் ஜெயின் 7 வருடத்திற்கு முன்பு பெரிய அளவில் பிரபலம் இல்லாமல் அறிமுகம் செய்யப்பட்ட சியோமி இன்று இந்தியாவின் முன்னணி ஸ்மார்ட்போன், டிவி, மற்றும் பல எலக்ட்ரானிக்ஸ் கருவிகள் விற்பனையில் முன்னோடியாக உள்ளது.

புதிய பதவி
 

புதிய பதவி

கடந்த வருடம் மனு குமார் ஜெயின்-ஐ சீனாவின் சியோமி உயர்மட்ட நிர்வாகம் துணை தலைவர் மற்றும் நிர்வாகத் தலைவர் பதவிகளில் இருந்து நீக்கி சியோமியின் குரூப் துணை தலைவராக நியமித்தது. தற்போது சியோமி நிறுவனத்தின் சர்வதேச வர்த்தகத்தின் strategy, marketing மற்றும் PR பிரிவை வழிநடத்துகிறார்.

ஆல்வின் சே

ஆல்வின் சே

இந்நிலையில் இந்திய வர்த்தகத்தின் தலைவராக ஸ்டான்போர்டு பல்கலைக்கழக பட்டதாரியும் பிரிட்டன் நாட்டைத் சேர்ந்தவருமான ஆல்வின் சே தற்போது சியோமி இந்தியா-வின் ஜெனர்ல் மேனேஜர் ஆக நியமிக்கப்பட்டு உள்ளார்.

இந்தோனிஷியா

இந்தோனிஷியா

இதற்கு முன்பு ஆல்வின் சே இந்தோனிஷியா வர்த்தகத்தை நிர்வாகம் செய்தது மட்டும் அல்லாமல் சியோமியின் ப்ரீமியம் பிராண்டான போகோ-வின் துவக்க உறுப்பினராக இருந்தார்.

இந்திய வர்த்தகம்

இந்திய வர்த்தகம்

செப்டம்பர் மாதம் முதல் சியோமி இந்தியா முரளிகிருஷ்ணன் பி – தலைமை இயக்க அதிகாரி, ரகு ரெட்டி – தலைமை வணிக அதிகாரி, சமீர் பிஎஸ் ராவ் – தலைமை நிதி அதிகாரி ஆகியோர் தலைமையில் நடந்தது.

 தலைமை மார்கெட்டிங் அதிகாரி

தலைமை மார்கெட்டிங் அதிகாரி

Poco இந்தியாவின் முன்னாள் தலைவர், அனுஜ் ஷர்மா, Xiaomi இந்தியாவின் புதிய தலைமை மார்கெட்டிங் அதிகாரியாக இணைய உள்ளது. மேலும் ஒட்டுமொத்த பிராண்ட் மற்றும் சந்தைப்படுத்தல் உத்தியை வழிநடத்தும் பொறுப்பை , அனுஜ் ஷர்மா ஏற்கிறார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Xiaomi Appoints Alvin Tse as new India head in the place of manu kumar jain

Xiaomi Appoints Alvin Tse as new India head in the place of manu kumar jain; Alvin Tse replacing manu kumar jain as new xiaomi india head

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.