ஜானி டெப் விளம்பரப்படுத்திய பர்ஃபியூம்க்கான தேவை அதிகரிப்பு; வழக்கின் தாக்கம் காரணமா? பின்னணி என்ன?

ஜானி டெப் vs ஆம்பர் ஹெர்ட் இடையிலான வழக்கு உலகம் முழுவதும் கவனிக்கப்பட்டது. சமீபத்தில் இத்தனை அதிகம் பேரால் பார்க்கப்பட்டு பின்தொடரப்பட்ட வழக்கு வேறு எதுவும் கிடையாது.

புகழ்பெற்ற நடிகர்களான ஜானி டெப், ஆம்பர் ஹெர்ட் இருவருக்கும் இடையிலான மானநஷ்ட வழக்கு அமெரிக்காவின் வெர்ஜினியா நீதிமன்றத்தில் ஆறு வாரங்களுக்கு மேல் நடந்து வந்தது. இதன் தீர்ப்பு ஜூன் 1 அன்று வெளியானது. ஜானி டெப்புக்கு இழப்பீடாக 10.35 மில்லியன் அமெரிக்க டாலர் ஆம்பர் தர வேண்டும் எனவும் ஆம்பருக்கு 2 மில்லியன் அமெரிக்க டாலர் இழப்பீடாகக் கிடைக்கும் எனவும் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இந்நிலையில் வழக்கு நடைபெறும் காலத்தில் ‘Dior Sauvage’ நறுமண பர்ஃபியூம்களுக்கான தேவை வழக்கத்தை விட அதிகரித்திருப்பதாக ஆய்வொன்று சொல்கிறது. ஆண்களுக்கான இந்தப் பிரத்யேக பர்ஃபியூமின் முகமாக 2015 முதல் ஜானி தொடர்ந்து வருகிறார். வழக்கு நடைபெற்ற காலத்திலும் அவரே அதன் மாடல்.

Dior Sauvage பர்ஃபியூம் விற்பனை, ஜானி மீது கவனம் குவிந்திருக்கும் இந்த வேளையில் அதிகரித்திருப்பதாக Hey Discount நடத்திய ஆய்வு சொல்கிறது.

ஜானி டெப் vs ஆம்பர் ஹெர்ட்

இந்த நறுமண பொருள் பற்றி கூகுளில் நடந்த தேடல்களின் எண்ணிக்கை 48 சதவிகிதம் அளவுக்கு உயர்ந்திருக்கிறது. கடந்த மார்ச்சில் 8,23,000 ஆக இருந்த தேடுதல் எண்ணிக்கை ஏப்ரல் 2022-ல் 1.2 மில்லியனாக அதிகரித்தது.

டிக்டாக் செயலியிலும் 63 சதவிகிதம் Sauvage-க்கான பார்வைகள் அதிகரித்து இருக்கின்றன. சமீபத்தில்தான் Dior’s Sauvage அதிக பிரபலமான பர்ஃபியூம் பிராண்டுகளில் இரண்டாவது இடம் பிடித்தது. முதலிடத்தில் இருக்கும் பிராண்ட் Baccarat Rouge 540.

இதனிடையே இந்தத் தீர்ப்பு தனக்கு ஏமாற்றம் அளிப்பதாக ஆம்பர் ஹெர்ட் தெரிவித்து இருந்தார். அவரது வழக்கறிஞர், “ஆம்பரால் அவ்வளவு பெரிய தொகையை செலுத்த இயலாது. அவர் மேல்முறையீட்டுக்குச் செல்லும் திட்டத்தில் இருக்கிறார்” எனத் தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.