அம்பந்தோட்டை – மித்தெனிய, கட்டுவன வீதி பகுதியில் சட்டவிரோதமான முறையில் டீசலை சேமித்து வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்து வந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் நேற்று மித்தெனிய, கட்டுவன வீதி பகுதியில் வீடொன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர் தொடர்பில் வெளியான தகவல்
இதன்போது, 1,700 லீற்றர் டீசல் விசேட அதிரடிபடை அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு சட்டவிரோதமான முறையில் டீசலை சேமித்து வைத்துள்ள நபர் மித்தெனிய பிரதேசத்தை சேர்ந்த 45 வயதுடையவர் எனவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் மித்தெனிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.