சீன கடற்படையின் வலிமையை உலகிற்கு எடுத்துக் காட்டும் வகையில் கட்டமைக்கப்பட்டு வந்த அதிநவீன விமானம் தாங்கி கப்பல், தற்போது நிறைவடையும் நிலையில் இருப்பதாக புதிய செயற்கை கோள் புகைப்படங்கள் காட்டுகின்றன.
சீனாவின் கடற்படை வலிமையை அதிகரிக்கும் நோக்கில் அந்த நாட்டு அரசாங்கம் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் ஷாங்காய் அருகே ஜியாங்னான் கப்பல் கட்டும் தளத்தில் கட்டமைத்து வரும் டைப் 003 கேரியர் விமானம் தாங்கி போர் கப்பல் தற்போது நிறைவடையும் நிலையில் இருப்பதாக புதிய செயற்க்கை கோள் புகைப்படங்கள் காட்டுகின்றன.
இது சீன நாட்டின் வளர்ந்து வரும் இராணுவ வலிமை மற்றும் சீனாவின் நவீனமயமாக்கல் முயற்சிகளின் ”முதல் தருணம்” என மூலோபாய மற்றும் சர்வதேச ஆய்வுகளின் மையம் (CSIS) விவரித்துள்ளது.
மேலும் இதனை சீனாவின் தேசிய டிராகன் படகு திருவிழாவுடன் இணைத்து கப்பலை வெள்ளிக்கிழமை பயன்பாட்டிற்கு அறிமுகப்படுத்தலாம் எனவும் பரிந்துரைத்துள்ளது.
செவ்வாய்கிழமை Maxar Technologies என்ற நிறுவனத்தின் செயற்கைக்கோளால் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் கேரியருக்குப் பின்னால் இருக்கும் உபகரணங்கள் நீக்கப்பட்டது தெரிகிறது.
இதுத் தொடர்பான கருத்துகளுக்கு சீனாவின் தேசிய பாதுகாப்பு அமைச்சகம் இதுவரை பதிலளிக்காத நிலையில், சீன அரசு நடத்தும் குளோபல் டைம்ஸ் செய்திதாள், கப்பல் விரைவில் ராணுவ சேவைக்கு வரலாம் எனத் தெரிவித்தது, மற்றும் சீன கடற்படை சமீபத்தில் இதுத் குறித்த விளம்பர வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தது குறிப்பிடதக்கது.
இந்தநிலையில், சீனாவின் அதிநவீன கேரியர் கப்பல் 2024ஆம் ஆண்டு வரை செயல்பாட்டிற்கு வராது என அமெரிக்க மதிப்பிட்டதுடன், முதலில் விரிவான கடல் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.
அத்துடன் இது சீனாவின் ராணுவ வலிமையில் மிகவும் மேம்பட்டது எனவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.
கூடுதல் செய்திகளுக்கு: ரஷ்ய வீரர்களை ஓடவிட்டு…இழந்த நிலப்பரப்பை மீண்டும் கைப்பற்றிய உக்ரைன்
இந்த கேரியர் விமானத்தில், கவுண் ஏவுதல் அமைப்பு, கூடுதல் போர் விமானங்களை உள்ளடக்கும் வசதி மற்றும் விரிவான விமான செயல்பாடுகளை ஆதரிக்க உதவும் வசதிகள் இருப்பதாக என தெரிவந்துள்ளது.