IndiGo airline launched its fourth frequency on the Chennai – Tiruch on Wednesday.திருச்சி- சென்னை இடையே 4 வது விமான சேவையை கடந்த புதன்கிழமை முதல் இன்டிகோ விமான நிறுவனம் தொடங்கி உள்ளது.
கொரோனா பெருந்தொற்று முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் திருச்சியில் இருந்து கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு கடந்த மார்ச் மாதம் முதல் வெளிநாடுகளுக்கு விமான சேவைகள் அதிக அளவில் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் உள்நாட்டு விமான சேவைகளும் அதிகரித்து வருகிறது. தற்போது விடுமுறை காலம் என்பதால் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதனால் விமான நிறுவனங்கள் தங்களது சேவைகளை அதிகரித்து வருகின்றன.
இந்நிலையில் இண்டிகோ விமான நிறுவனம் திருச்சி – சென்னை இடையே தனது 4 வது சேவையை கடந்த புதன்கிழமை தொடங்கியுள்ளது. இந்த சேவையை பற்றிய முழு விவரங்கள் பின்வருமாறும் :
திங்கள், புதன், வெள்ளி, ஞாயிற்றுகிழமை- ஆகிய நாட்களில் சென்னையிலிருந்து மதியம் 2.10 மணிக்கு புறப்படும் விமானம் திருச்சிக்கு 3.05 மணிக்கு சென்றடையும். அதுபோல் திருச்சியிலிருந்து மதியம் 3.40 புறப்படும் விமானம் சென்னைக்கு மாலை 4.40 மணிக்கு வந்தடையும்.
செவ்வாய், வியாழன், சனிக்கிழமை- ஆகிய நாட்களில் சென்னையிலிருந்து மாலை 4.05 மணிக்கு புறப்படும் விமானம் திருச்சிக்கு மாலை 4.50 மணிக்கு சென்றடையும். அதுபோல் திருச்சியிலிருந்து மாலை 5.10 மணிக்க் புறப்படும் விமானம் சென்னைக்கு 6.10 மணிக்கு வந்தடையும். இந்த சேவைக்கு ஏடிஆர் வகை விமானங்களை இன்டிகோ நிறுவனம் பயன்படுத்துகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“