புனேயில் பசுவை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் 22 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
புனேவில் உள்ள குஸ்கானில் வசிப்பவர் சதீஷ் தக்டு கோகரே. இவருக்கு மே 31 அன்று, தனது பசு திடீரென வித்தியாசமாக முழக்கமிடும் சத்தம் கேட்டுள்ளது. மாட்டுத் தொழுவம் சென்று பார்த்தபோது தனது பசு மீது ஆடையின்றி ஒரு இளைஞர் பாலியல் வன்கொடுமை செய்து கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். அந்த இளைஞர் அதே ஊரைச் சேந்த தீபக் ராஜ்வாடே என்பது சதீஷ்-க்கு தெரியவந்துள்ளது.
சதீஷ் கூச்சலிட்டதும் அவரது குடும்பத்தினரும் மாட்டுத் தொழுவத்திற்கு திரண்டு வந்தனர். இதையடுத்து தீபக் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். சதீஷ் உடனடியாக போலீஸாருக்கு தகவல் தெரிவிக்க, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவரது வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் உதவியுடன் தீபக் செய்த குற்றத்தை போலீசார் உறுதி செய்தனர். இந்திய தண்டனைச் சட்டம் 377இன் கீழ் 22 வயதேயான தீபக் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்தனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
