அ.தி.மு.க. மூத்த தலைவர் பொன்னையன், அ.தி.மு.க.வை பின்னுக்கு தள்ள பா.ஜனதா முயற்சி செய்வதாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பகிரங்கமாக குற்றம் சாட்டினார். இது அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இதுதொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகியோர் கூட்டாக பேட்டி அளித்தனர்.
அப்போது எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-
அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் ஆதரவளித்த பாஜக, பாமக கட்சிகளுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
வி.பி.துரைசாமி எந்தக் கட்சியில் இருந்து எந்தக் கட்சிக்கு சென்றார் என்பது அனைவருக்கும் தெரியும். வி.பி.துரைசாமி போன்ற கட்சி மாறி செல்பவர்கள் நாங்கள் இல்லை. சட்டமன்றத்தில் அதிமுக எப்படி செயல்படுகிறது என்பது நாட்டு மக்களுக்கு தெரியும். அதனால், அதிமுகவின் செயல்பாட்டுக்கு வி.பி.துரைசாமி சான்றளிக்க தேவையில்லை.
பாஜக குறித்து அதிமுக மூத்த தலைவர் பொன்னையன் பேசியது அவரது சொந்த கருத்தாகும். அவரது சொந்த கருத்தாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு கூறினர்.
இதையும் படியுங்கள்..
கார்த்தி சிதம்பரத்தின் முன்ஜாமின் மனு தள்ளுபடி