காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்திக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியின் மகளும், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தியின் சகோதரியுமான பிரியங்கா காந்திக்கு, இன்று, கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக, சமூக வலைதளமான ட்விட்டரில், அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்து உள்ளதாவது:
எனக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. மருத்துவர்கள் ஆலோசனைப்படி, வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறேன். என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுங்கள்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நேற்று, பிரியங்கா காந்தியின் தாயார் சோனியா காந்திக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று அவருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.