பாரீஸ்:
கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ஆடவர் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த அரையிறுதி ஆட்டம் ஒன்றில் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ரபேல் நடால், ஜெர்மனியைச் சேர்ந்த அலெக்சாண்டர் ஸ்வெரெவ் ஆகியோர் மோதினர்.
முதல் சுற்றை 7-6 என்ற செட் கணக்கில் நடால் கைப்பற்றினார். விறுவிறுப்பாக நடந்த 2-வது சுற்றில் ஸ்வெரேவுக்கு காலில் காயம் ஏற்பட்டது. காயத்தால் பாதிக்கப்பட்ட அவரால் இந்தப் போட்டியை தொடர முடியவில்லை. இதனால் போட்டியிலிருந்து ஸ்வெரெவ் விலகினார். இதையடுத்து, இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
மற்றொரு அரையிறுதிப் போட்டியில் நார்வேயின் காஸ்பர் ரூட், குரோசியாவின் மெரின் சிலிச்சுடன் மோதினார். முதல் செட்டை 6-3 என சிலிச் கைப்பற்றினார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரூட் 2,3 மற்றும் 4-வது செட்டை 6-4, 6-2, 6-2 என கைப்பற்றி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் ரபேல் நடாலும், காஸ்பர் ரூட்டும் மோத உள்ளனர்.