சீன வங்கிகள் $2.3 பில்லியன் மறுநிதியளிப்பு செய்ய ஒப்புக்கொண்டதால், பெட்ரோலியப் பொருட்களின் விலையை பாகிஸ்தான் பெருமளவில் உயர்த்துகிறது.
2022-23 நிதியாண்டில், பாகிஸ்தானின் தேசிய மின்சக்தி ஒழுங்குமுறை ஆணையம் (NEPRA) அடிப்படை மின் கட்டணத்தை கிலோவாட் ஒன்றுக்கு (kWh) ரூ.7.9078 உயர்த்தியுள்ளது. பாகிஸ்தானில் தற்போது அடிப்படை மின் கட்டணம் யூனிட்டுக்கு ரூ.16.91 என்பதில் இருந்து 24 ரூபாயாக அதிகரிக்கும்.
பாகிஸ்தானின் நிதிச் சிக்கல்கள் எப்போது முடியும் என்பது தெரியவில்லை. அதற்கான நம்பிக்கைகள் கானல்நீராகவே இருக்கும் நிலையில், பாகிஸ்தான் அரசு மீண்டும் பல பெட்ரோலிய பொருட்களின் விலையை ரூ.30 என்ற அளவில் உயர்த்தியுள்ளது.
மேலும் படிக்க | கடனில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தான்… கை விரித்த சீனா
இது இந்தியாவின் அண்டை நாடான இலங்கையின் திவால் நிலையை நோக்கி, மற்றொரு அண்டை நாடான பாகிஸ்தானும் செல்கிறதா என்ற அச்சத்தையும் அதிகரிக்கிறது.
பெட்ரோல் பொருட்களின் விலை மட்டும் உயரவில்லை, மின்சாரத்தின் விலையும் யூனிட்டுக்கு ரூ.7.9 உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கிடையில் சீன வங்கிகள் பாகிஸ்தானுக்கு 2.3 பில்லியன் டாலர்களை மறுநிதியளிப்பதற்கு ஒப்புக்கொண்டதாகத் தெரிகிறது.
இந்த நிதி பாகிஸ்தானின் அந்நிய செலாவணி கையிருப்பை உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாகிஸ்தானில் பெட்ரோல் விலை உயர்வுக்கு பிறகு, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.209.86 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.204.15 ஆகவும், மண்ணெண்ணெய் விலை லிட்டருக்கு ரூ.181.94 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் படிக்க | இந்தியா – பாகிஸ்தான் இடையே பேச்சுவார்த்தை நடக்கிறதா; வெளியான பரபர தகவல்
வியாழன் (2022, ஜூன் 3) அன்று, இஸ்லாமாபாத்தில் ஒரு செய்தியாளர் சந்திப்பில் பேசியபோது, அந்நாட்டு நிதியமைச்சர் மிஃப்தா இஸ்மாயில் இந்த விலை உயர்வை அறிவித்தார். புதிய விலை நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என அமைச்சர் தெரிவித்தார். ஒரு வாரத்திற்கு முன்பும் பாகிஸ்தானில் கட்டணங்கள் உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
எரிபொருளுக்கான வரி எதுவும் வசூலிக்காததால், 30 ரூபாய் உயர்த்தப்பட்ட போதிலும், அரசாங்கம் இன்னும் 9 ரூபாய் இழப்பை எதிர்கொள்வதாக நிதியமைச்சர் மிஃப்தா இஸ்மாயில் கூறினார்.
மேலும் படிக்க | இலங்கை வழியில் செல்லும் பாகிஸ்தான்… கிரிக்கெட் வீரரின் அதிர்ச்சி ட்வீட்
2022-23 நிதியாண்டில், பாகிஸ்தான் தேசிய மின்சக்தி ஒழுங்குமுறை ஆணையம் (NEPRA) அடிப்படை மின் கட்டணத்தை kWhக்கு ரூ.7.9078 உயர்த்தியுள்ளது. பாகிஸ்தானில் தற்போது அடிப்படை மின் கட்டணம் யூனிட்டுக்கு ரூ.16.91. இப்போது, ஒரு யூனிட் 24 ரூபாய்க்கு மேல் இருக்கும்.
நாட்டில் உள்ள கடைகளில் சர்க்கரை மற்றும் கோதுமையின் விலைகள் முறையே கிலோ ஒன்றுக்கு ரூ.70 மற்றும் ரூ.40 என்ற விலையில் ஸ்திரத்தன்மையை உறுதி செய்ய அரசாங்கம் முயற்சிக்கும் என்று இஸ்மாயில் கூறினார்.
“ஐஎம்எஃப் என்ன சொன்னாலும் அரசாங்கம் பெட்ரோல், டீசலை நஷ்டத்தில் விற்க முடியாது என்றும் நிதியமைச்சர் மிஃப்தா இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | கடனில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தான்… கை விரித்த சீனா…
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link – https://bit.ly/3hDyh4G
Apple Link – https://apple.co/3loQYeR