பெங்களூரு: கர்நாடக மாநிலம் கமலாபுரா கிராமத்தில் பேருந்து – சரக்கு வாகனம் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. கோவாவில் இருந்து ஐதராபாத்துக்கு சுற்றுலா பயணிகளுடன் சென்ற தனியார் பேருந்து கர்நாடகாவில் உள்ள குல்பர்கா மாவட்டம் வழியாக சென்று கொண்டிருந்தபோது பேருந்து கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த சரக்கு வாகனம் மீது மோதியது.விபத்து நடைபெற்ற இடத்தில் ஒரு பாலம் இருந்ததால் சரக்கு வாகனம் மீது மோதிய பேருந்து அந்த பலத்திற்கு கீழே விழுந்து தீ பற்றி எரிய தொடங்கியது. இதையடுத்து பேருந்தில் இருந்தவர்கள் தீ மளமளவென பற்ற தொடங்கியதை அடுத்து வேகமாக பேருந்தை விட்டு வெளியேறினர். இந்த பேருந்தில் 29 பேர் பயணித்ததாக கூறப்பட்ட நிலையில் 22 பேர் லேசான காயங்களுடன் தப்பினர்.இந்நிலையில் இந்த விபத்து குறித்த விசாரணையில் 3 பேர் உயிரிழந்ததாகவும், மேலும் சில உடல்கள் பேருந்தில் இருக்கலாம் என போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. மேலும் உடல்கள் மீட்கும் பணியானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது