சென்னை அடுத்த திருவேற்காட்டில் உள்ள போதை மறு வாழ்வு மையத்தில் இருந்து 17 பேர் தப்பி சென்றதாக கூறப்படும் நிகழ்வு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேல் அயனம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் போதை மறுவாழ்வு மையத்தில் தங்கி சிகிச்சை பெற்று வந்தவர்களில் 17 பேர், ஒரு அறையின் ஜன்னலை உடைத்து அதன் வழியாக தப்பி சென்றதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து, தப்பிச் சென்றவர்களில் 8 பேர் மீண்டும் மறு வாழ்வு மையத்திற்கு வந்ததாக சொல்லப்படும் நிலையில் தப்பியோடிய 9 பேரை தேடும் நடைபெற்று வருகிறது.