பிரித்தானிய மகாராணியாரின் பிளாட்டினம் ஜூபிலிக் கொண்டாட்ட பார்ட்டியில் பங்கேற்க விரும்பிய சமூக ஆர்வலர், ஊடக பிரபலம், தொழிலதிபர் என பன்முகம் கொண்ட பிரபல அமெரிக்க மொடலான கிம் கார்டேஷியனுக்கு மூக்கறுப்பே பதிலாக கிடைத்துள்ளது.
ஊடகங்களில் இந்தப் பெண்ணின் கவர்ச்சிப்படங்கள் வெளிவராத நாளே இல்லை எனலாம். அப்படி வகை வகையாக கவர்ச்சி உடையுடனும், உடையே இல்லாமலும் வெளியாகும் அவரது புகைப்படங்கள், குடும்பமாக அவர் நடத்தும் தொலைக்காட்சி நிகழ்ச்சி என பலவகையில் அவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் ஏராளம்.
சமூக ஆர்வலராக அவர் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பை சந்தித்த புகைப்படங்கள் மிகப் பிரபலமாகின.
அப்படியே, பிரித்தானியாவிலும் ஒரு கலக்குக் கலக்கலாம் என ஆசைப்பட்ட கிம்முக்கு மூக்கறுப்பையே பதிலாக கொடுத்துள்ளது பிரித்தானிய அரண்மனை வட்டாரம்.
ஏற்கனவே ஒரு அமெரிக்கப் பெண்ணால் ராஜ குடும்பம் பட்ட பாடு போதும் என நினைத்தார்களோ என்னவோ, கிம் பிரித்தானிய மகாராணியாரின் பிளாட்டினம் ஜூபிலிக் கொண்டாட்ட பார்ட்டியில் பங்கேற்க அனுமதி கோர, அவரது கோரிக்கையை பிரித்தானிய அரண்மனை வட்டாரம் நிராகரித்துவிட்டது.
வி ஐ பி டிக்கெட்கள்தான் வேண்டும் என்றில்லை, சாதாரண டிக்கெட் கிடைத்தால் கூடப் போதும், தானும் தன் புதுக் காதலரான Pete Davidsonம் பார்ட்டியில் கலந்துகொள்ளத் தயார் என்று கூட கிம் கேட்டுப் பார்த்ததாகவும், ஆனாலும், அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டுவிட்டதாகவும் கூறப்படுகிறது.