விவசாய திணைக்களத்துடன் இணைந்து மனித வள வேலைவாய்ப்பு திணைக்களம் நடாத்தும் “மரக்கறி விதைபொருள் வழங்கும் செயற்றிட்டம்” மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கணபதிப்பிள்ளை மகேசன் தலைமையில் இன்று (03) மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் ஆரம்பமானது.
இந் நிகழ்ச்சித்திட்டத்தில் மேலதிக அரசாங்க அதிபர், விவசாயப் பணிப்பாளர் மற்றும் மாவட்டச் செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள், துறைசார் திணைக்களத் தலைவர்கள், விவசாயிகள், மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.