சமீபத்தில் இந்தியாவின் முன்னணி பணக்காரரான முகேஷ் அம்பானியை தொழிலதிபர் அதானி முந்தினார் என்பதும் அவருடைய சொத்து மதிப்பு அம்பானியின் சொத்து மதிப்பை விட அதிகம் ஆனது என்பதை பார்த்தோம்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அம்பானி நிறுவனங்களின் பங்குகள் பங்குச் சந்தையில் உயர்ந்ததை அடுத்து தற்போது இந்திய அளவில் முகேஷ் அம்பானி மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார்.
3 ஆண்டுகளில் 6000 புதிய கிளைகள்: எச்டிஎஃப்சி வங்கி திட்டம்
இதனை அடுத்து இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் நம்பர் ஒன் என்ற இடத்தையும் உலக அளவிலான பட்டியலில் எட்டாவது இடத்தையும் முகேஷ் அம்பானி பிடித்துள்ளார்.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
கடந்த சில நாட்களாக பங்கு சந்தையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு மிகப்பெரிய அளவில் உயர்ந்துள்ளது. இன்று ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் 3 சதவீதம் உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை அடுத்தே முகேஷ் அம்பானி இந்திய பணக்காரர் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளார்.
பில்லியனர்கள் பட்டியல்
ப்ளூம்பர்க் என்ற நிறுவனம் உலக பில்லியனர்களின் பட்டியலை வெளியிட்டு உள்ள நிலையில் அந்தப் பட்டியலில் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 99.7 பில்லியன் டாலர் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அதே நேரத்தில் அதானியின் சொத்து மதிப்பு 98.7 பில்லியன் டாலராக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அம்பானி – அதானி
உலக பணக்காரர்கள் பட்டியலில் அம்பானி தற்போது 8-வது இடத்திலும் அதானி 9-வது இடத்திலும் உள்ளனர். இந்த பட்டியலில் முதல் 10 இடத்தில் உள்ளவர்களில் இவர்கள் இருவர் மட்டுமே இந்தியர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த பிப்ரவரி மாதம் இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர் என்ற பெருமையை அதானி பெற்று, அம்பானியை பின்னுக்கு தள்ளிய நிலையில் தற்போது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் உயர்ந்ததன் காரணமாக மீண்டும் அம்பானி முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
உலக பணக்காரர்கள்
உலக அளவில் நம்பர் ஒன் இடத்தை டெஸ்லா நிறுவனத்தின் எலான் மஸ்க் பெற்றுள்ளார். அவருக்கு 227 பில்லியன் டாலர் சொத்து மதிப்பு உள்ளது. அவரை அடுத்து அமேசான் நிறுவனத்தின் ஜெஃப் பிஜாஸ் 149 பில்லியன் டாலர்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். இந்த பட்டியலில் பில்கேட்ஸ் 4வது இடத்திலும், வார்ரன் பஃபட் 5வது இடத்திலும், அம்பானி 8வது இடத்திலும் அதானி 9 இடத்திலும், மார்ஜ் ஜூக்கர்பெர்க் 13வது இடத்திலும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Mukesh Ambani richest in Asia, up at 8th rank on Bloomberg Billionaires list
Mukesh Ambani richest in Asia, up at 8th rank on Bloomberg Billionaires list | மீண்டும் முதலிடத்தில் அம்பானி: அதானியை பின்னுக்கு தள்ளியது எப்படி?