முன்பு ஷவர்மா, இப்போது தந்தூரி சிக்கன்..பலியான பள்ளி மாணவர்!


தமிழகத்தின் திருவண்ணாமலை மாவட்டத்தில் 12ஆம் வகுப்பு மாணவர் தந்தூரி சிக்கன் சாப்பிட்டதால் உயிரிழந்த விவகாரத்தில், குறித்த உணவகத்தை தற்காலிகமாக மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவர் திருமுருகன்.

இவர் கடந்த 24ஆம் திகதி தேர்வு எழுதி முடித்த நிலையில், நண்பர்களுடன் சேர்ந்து ஓட்டல் ஒன்றில் சிக்கன் தந்தூரி மற்றும் பிரைடு ரைஸ் சாப்பிட்டுள்ளார்.

அதன் பின்னர் வீட்டிற்கு வந்த அவருக்கு இரவு முழுவதும் வயிற்று வலி ஏற்பட்டதால், அவரது பெற்றோர் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு திருமுருகனை பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு Food poison ஏற்பட்டதாக தெரிவித்தனர்.

முன்பு ஷவர்மா, இப்போது தந்தூரி சிக்கன்..பலியான பள்ளி மாணவர்!

மறுநாள் மாணவருக்கு திடீரென வயிற்றுப்போக்கு அதிகமாக ஏற்பட்டதால் வேறொரு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும்போது, வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

ஏற்கனவே கேரளாவில் ஷவர்மா சாப்பிட்ட பள்ளி மாணவி உயிரிழந்த நிலையில், இந்த விடயம் பூதாகரமாக வெடித்தது.

முன்பு ஷவர்மா, இப்போது தந்தூரி சிக்கன்..பலியான பள்ளி மாணவர்!

அதனைத் தொடர்ந்து குறித்த ஓட்டலை மூடக் கூறி கண்டனங்கள் எழுந்தன.

இந்த நிலையில் ஓட்டலில் ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள் தற்காலிகமாக ஓட்டலை மூட உத்தரவிட்டுள்ளார். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.