வெகு தொலைவில் உள்ள ஊர்களுக்கு செல்ல ரயில்களில் பயணிப்போர் பெரும்பாலும் சந்திக்கும் சிரமம்.. எப்பதான் நம்ம ஊருக்கான ஸ்டேஷன் வருமோ என எண்ணியே அந்த பயணத்தை டென்ஷன் நிறைந்ததாகவே வைத்திருப்பார்கள்.
இது மாதிரியான எண்ணங்கள் ஏசி கோச்சில் வந்தாலும் சரி, சாதாரண ஸ்லீப்பர் கோச்சில் வந்தாலும் சரி அந்த துயரத்தை வார்த்தைகளால் விவரித்துவிடவே முடியாது. அதுவும் குழந்தைகள், முதியவர்களோடு சென்றுவிட்டால் அந்த பயணிகளின் பாடு திண்டாட்டம்தான்.
இப்படியான சிரமங்களை போக்கும் வகையில் IRCTC புது திட்டத்தை கொண்டு வந்திருக்கிறது. அதன்படி, போய் சேர வேண்டிய ஸ்டேஷன் எப்போ வருமோ என்ற கவலையை விடுத்து நிம்மதியாக பயணத்தை மேற்கொள்ள wake up call என்ற திட்டத்தை பயன்படுத்திக்கொண்டாலே போதும்.
சேர வேண்டிய ஊர் வருவதற்கு 20 நிமிடங்களுக்கு முன்பே ரயில்வேயிடம் இருந்து அலெர்ட் அழைப்பு கொடுக்கப்பட்டுவிடுமாம்.
இதற்காக பயணிகள் செய்ய வேண்டிய எளிமையான படிநிலைகள் இவைதான்:
IRCTCன் 139 என்ற ஹெல்ப்லைன் நம்பருக்கு கால் செய்ய வேண்டும்.
அழைப்பு இணைக்கப்பட்டவுடன், தெரிவு மொழியை தேர்வு செய்ய வேண்டும்.
அதன் பிறகு எந்த தொலைபேசி எண்ணுக்கு வேக் அப் கால் அலெர்ட் கொடுக்க வேண்டும் என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
இதையடுத்து 10 இலக்க PNR நம்பரை பதிவு செய்து எண் 1 ஐ அழுத்த வேண்டும்.
இவ்வளவேதான். கவலையை மறந்து பயணிகள் நிம்மதியாக தூங்கவோ, பாட்டு கேட்கவோ, படம் பார்க்கவோ செய்யலாம். உங்கள் ஊர் வருவதற்கு 20 நிமிடங்களுக்கு டிங் டாங் என கொடுக்கப்பட்ட தொலைப்பேசி எண்ணிற்கு வேக் அப் கால் வரும்.
இந்த அம்சத்தை இரவு 10 மணிமுதல் காலை 7 மணிவரை தொலைதூரம் பயணிப்போர் பயன்படுத்திக்கொள்ளலாம். இதற்காக வெறும் 3 ரூபாய் மட்டுமே பயணிகள் செலவிட்டால் போதும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM