ரஷ்ய படைகளின் கட்டுப்பாட்டிற்குள் சென்ற சீவிரோடோனெட்ஸ்க் நகரின் 20 சதவிகித பகுதிகளை உக்ரைனிய ராணுவம் மீண்டும் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைனின் மேற்கு மற்றும் மையப் பகுதி நகரங்களை ரஷ்ய வீரர்கள் கைப்பற்ற தவறியதை தொடர்ந்து, படைகள் பின்நகர்த்தப்பட்டு தற்போது உக்ரைனின் கிழக்கு மற்றும் வடக்கு பகுதிகளை தீவிர தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
கிழக்கு உக்ரைனின் பெரும்பாலான நகரங்களை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ள ரஷ்ய ராணுவம், தற்போது சீவிரோடோனெட்ஸ்க்(Sievierodonetsk) நகரை கைப்பற்றும் நோக்கில் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
🇺🇦Foreign Legion came to Sieverodonetsk.
Luhansk region is being helped by the fighters from the whole world. pic.twitter.com/YZtYlfAoMi
— ТРУХА⚡️English (@TpyxaNews) June 3, 2022
இந்தநிலையில், லுஹான்ஸ்க் கிழக்கு பிராந்தியத்தின் தலைவரான Serhiy Gaidai தெரிவித்துள்ள தகவலில், ரஷ்ய கட்டுப்பாட்டில் இதுவரை 70 சதவிகித நிலப்பரப்பில் இருந்தது ஆனால் இப்போது நாங்கள் அவர்களை தோராயமாக 20% பின்னுக்குத் தள்ளிவிட்டோம் எனத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் ரஷ்யப் படைகள் உக்ரைனிய நிலைகளை தாக்கி மணியளவில் முன்னேறி வருகின்றனர். அவர்கள் பீரங்கி, விமானம், மோட்டார் மூலம் அவர்கள் அனைத்தையும் அழித்து வருகின்றனர் எனத் தெரிவித்துள்ளார்.
கூடுதல் செய்திகளுக்கு: உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி… வரலாற்று பிழையை புடின் செய்துவிட்டார்: பிரான்ஸ் குற்றச்சாட்டு
மேலும் எங்களிடம் போதுமான மேற்கத்திய நீண்ட தூர ஆயுதங்கள் கிடைத்தவுடன், அவர்களை எங்களது நிலைகளில் இருந்து பின்னுக்கு தள்ளிவிடுவோம் எனத் தெரிவித்ததுடன் என்னை நம்புங்கள் ரஷ்ய படை வீரர்கள் நிச்சியமாக பின்வாங்கி ஓடுவார்கள் எனத் உறுதியளித்தார்.