இலங்கையின் தெற்கு பகுதியில் உள்ள இரத்தினபுரி எனும் மாவட்டத்தில் அமைந்துள்ளது எலபாத்த பிரதேசம். இங்கு திருமணமான 27 வயது இளம்பெண் நேற்று கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தார்.
அவர் அப்பகுதியில் வேலை முடித்துவிட்டு வீட்டுக்கு திரும்பும் வழியில் இந்த கொலை சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட இலங்கை போலீசார் கெஹலோவிகடம எனும் பகுதியை சேர்ந்த இளைஞாரை கைது செய்தனர். 21 வயதே ஆன அவர் இரண்டு குழந்தைகளுக்கு தந்தை ஆவார்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. போதைக்கு அடிமையான அவர் வீதியில் தனியாக நடந்து செல்பவர்களிடம் வழிப்பறி செய்து பணம் பிடுங்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். அப்படி பணம் தராதவர பல்வேறு நபர்களை அவர் கடுமையாக தாக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
சம்பவம் நடைபெற்ற அன்று கொலையுண்ட பெண் வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பியுள்ளார். அப்போது அந்த பெண்ணை பின் தொடர்ந்த இளைஞர் 100 ரூபாய் கேட்டு அவரை மிரட்டியுள்ளார். ஆனால் பணம் கொடுக்க மறுத்ததால் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் பெண்ணை மூன்று இடங்களில் அந்த இளைஞர் சரமாறியாக குத்திவிட்டு தப்பியோடியதாக தெரிகிறது.
மேலும் படிக்க | 2026 தேர்தலில் பாஜக சார்பில் 150 எம்.எல்.ஏ.க்கள் வெல்வார்கள் – அண்ணாமலை நம்பிக்கை
அப்போது அந்த வழியாக வந்தவர்கள் சாலையில் ரத்த வெள்ளத்தில் இளம்பெண் உயிருக்கு போராடியதைக்கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் பாதி வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
கொலையாளியை விரைந்து கைது செய்த போலீசார் கொலைக்கு அவர் பயன்படுத்திய கத்தியை பறிமுதல் செய்துள்ளனர். மேலும், இதேபோல் மேலும் யாரையோனும் அவர் கொலை செய்துள்ளாரா? எனும் கோணத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். வெறும் 100 ரூபாய் பணத்திற்காக திருமணமான இரண்டு மாதத்தில் இளம்பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் தெற்கு இலங்கையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க | லோகேஷ் கனகராஜின் சம்பவம்! விக்ரம் திரைவிமர்சனம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link – https://bit.ly/3hDyh4G
Apple Link – https://apple.co/3loQYe