கோவாவில் இருந்து ஹைதராபாத் நோக்கி இன்று அதிகாலை 29 பயணிகளுடன் தனியார் பேருந்து ஒன்று வேகமாக சென்றுக் கொண்டிருந்தது. கர்நாடகா மாநிலம் கலபுர்கியில் உள்ள கமலாபுரா அருகே பஸ் பயணித்துக் கொண்டிருந்தபோது, எதிரே வந்து கொண்டிருந்த சரக்கு வாகனம் மீது பயங்கர வேகத்தில் மோதியது.
இதில், பேருந்து தீ பிடித்து எரிந்தது. பேருந்தின் முன்பகுதியில் பற்றி தீ மளமளவென பேஸ் முழுவதும் பரவ தொடங்கியது. பயணிகள் தங்களின் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள உடைமைகளுடன் பேருந்தில் இருந்து குதித்து தப்பிக்க முயன்றனர்.
ஆனாலும் இந்த கோர விபத்தில் 22 பேர் மட்டுமே தப்பியதாகவும், 7 பேர் சம்பவ இடத்திலேயே பலியானதாகவும் போலீசார் தெரிவித்தனர். விபத்தில் காயமடைந்தவர்களுக்கு கலபுர்கியில் உள்ள மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், படுகாயடைந்த லாரி ஓட்டுநர், விபத்தில் தப்பிய பயணிகள் உள்ளிட்டோரிடம் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.