சிவகங்கை: ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் செலுத்துவேன் என்று பிரதமர் கூறியதாக அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் நிரூபித்தால் அரசியலை விட்டு விலகத் தயார் என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்தார்.
சிவகங்கையில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திமுக தேர்தல் அறிக்கையில் கூறியபடி பெட்ரோல், டீசல் விலையை 30 நாட்களுக்குள் குறைக்க வேண்டும் இல்லை யெனில் ஜூன் 20-ல் மாநிலம் முழுவதும் 60 இடங்களில் உண் ணாவிரதம் இருக்க உள்ளோம்.
மே மாதம் வரையிலான ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை மத்திய அரசு விடுவித்தது. ஆனால் பிரதமர் பங்கேற்ற விழாவில் பேசிய முதல்வர், ஏற்கெனவே 14,000 கோடி பாக்கி உள்ளதாக கூறியுள்ளார். முதல்வர் சரியான புள்ளி விவரத்தை தெரிந்துகொள்ளவில்லையா? அல்லது அவருக்கு எழுதிக் கொடுத்தவர்களுக்கு தெரிய வில்லையா?
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கி லும் ரூ.15 லட்சம் செலுத்துவேன் என்று பிரதமர் சொன்னதாக அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் கூறியுள்ளார். அதை அவர் நிரூபித்தால் நான் அரசியலை விட்டு வெளியேறுகிறேன். அப்படி நிரூபிக்கவில்லை என்றால் பெரிய கருப்பன் அமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் அவரது வீட்டின் முன் நின்று நாங்கள் போராட வேண்டிய அவ சியம் வரும், என்றார். மாவட்டத் தலைவர் மேப்பல் சக்தி, நகரத் தலைவர் உதயா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.