புதுடில்லி: பணமோசடி வழக்கில் நேரில் ஆஜராக காங்கிரஸ் எம்.பி., ராகுல் அவகாசம் கேட்ட நிலையில், வரும் 13ம் தேதி ஆஜராக வேண்டும் என அவருக்கு அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது.
‘ஹெரால்டு’ பத்திரிகை பங்கு பரிவர்த்தனை முறைகேடு தொடர்பான வழக்கில் ஆஜராகும்படி, காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா மற்றும் அவரது மகனும் கட்சியின் முன்னாள் தலைவருமான ராகுல் ஆகியோருக்கு, மத்திய அமலாக்கத் துறை அதிரடியாக சம்மன் அனுப்பியுள்ளது. இதில், வரும் 8ம் தேதி ஆஜராகும்படி சோனியாவுக்கும், அதற்கு முன்பாக ஆஜராகும்படி ராகுலுக்கும் அறிவுறுத்தப்பட்டது. ஆனால், வெளிநாட்டில் உள்ளதால், விசாரணையை வேறு தேதிக்கு மாற்ற வேண்டும் என ராகுல் தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
இதனை ஏற்றுக்கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள், வரும் 13ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று ராகுலுக்கு உத்தரவிட்டுள்ளனர்.
புதுடில்லி: பணமோசடி வழக்கில் நேரில் ஆஜராக காங்கிரஸ் எம்.பி., ராகுல் அவகாசம் கேட்ட நிலையில், வரும் 13ம் தேதி ஆஜராக வேண்டும் என அவருக்கு அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது.’ஹெரால்டு’
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.