உலக நாயகன் கமலஹாசன் நடிப்பில் இன்று வெளியான திரைப்படம் விக்ரம்.
இந்த படத்தை உதயநிதி-யின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிட்டுள்ளது.
விக்ரம் திரைப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதை அடுத்து கமலஹாசனை நேரில் சந்தித்து அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் உதயநிதி.
உலகநாயகன் @ikamalhaasan சாரின் #Vikram திரைப்படம் இன்று வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள நிலையில், சாரை நேரில் சந்தித்து @RedGiantMovies_ சார்பில் வாழ்த்துகளை தெரிவித்தோம். கமல் சாரின் கலைப் பயணத்தில் #Vikram நிச்சயம் மிகப்பெரிய வசூல் சாதனையை நிகழ்த்தும். @RKFI #mahendran pic.twitter.com/V0TWKV9liE
— Udhay (@Udhaystalin) June 3, 2022
இதுகுறித்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள உதயநிதி, இந்தப் படம் கமலின் கலைப்பயணத்தில் மிகப்பெரிய வசூல் சாதனையை ஏற்படுத்தும் என்று தெரிவித்துள்ளார்.