ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களில் சர்வீஸ் சார்ஜ் பெறுவது சட்டவிரோதம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
சர்வீஸ் சார்ஜ் என்ற நடைமுறையை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று இந்திய தேசிய ரெஸ்டாரன்ட் கூட்டமைப்புக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஓரே நாளில் 3 வங்கி தலைவர்கள் நியமனம்.. யூனியன் பேங்க் ஆப் இந்தியாவின் தலைவராக மணிமேகலை..!
மேலும் உணவகத்தில் சென்று சாப்பிடுபவர்கள் சர்வீஸ் சார்ஜ் கட்ட முடியாது என்று கூறலாம் என்றும் மத்திய அரசு உறுதிபட தெரிவித்துள்ளது.
சர்வீஸ் சார்ஜ்
பெரும்பாலான ஹோட்டல்கள் மற்றும் ரெஸ்டாரண்டில் சர்வீஸ் சார்ஜ் வசூலிக்கப்பட்டு வருகிறது என்பதும், அது எதற்காக வசூலிக்கப்படுகிறது என்று தெரியாமலேயே உணவு சாப்பிட வருபவர்கள் அதனை செலுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
புகார்கள்
இந்த நிலையில் ஓட்டல்கள் மற்றும் ரெஸ்டாரண்ட்களில் சர்வீஸ் சார்ஜ் வசூலிப்பது சட்டவிரோதம் என்றும் இந்த நடைமுறையை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஹோட்டல்கள் மற்றும் ரெஸ்டாரன்ட்களில் வாடிக்கையாளர்களிடம் கட்டாயமாக சர்வீஸ் சார்ஜ் வசூலிப்பதாக நுகர்வோர் துறை அமைச்சகத்திற்கு ஏராளமான புகார்கள் வந்ததை அடுத்து மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உரிமை இல்லை
ஹோட்டல் நிர்வாக சட்டத்தின்படி ஹோட்டல் அல்லது ரெஸ்டாரன்ட் நடத்துபவர்கள் வாடிக்கையாளர்களிடம் சர்வீஸ் சார்ஜ் வசூலிக்க எந்தவிதமான உரிமையும் இல்லை என்று சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. வாடிக்கையாளரிடம் ஹோட்டல் நிர்வாகத்தினர் சர்வீஸ் சார்ஜ் வாங்குவது தவறு என்றும் ஒருவேளை சர்வீஸ் சார்ஜ் வாடிக்கையாளரின் விருப்பத்தின் பேரில் தருவதாக இருந்தால் அதை ஏற்றுக் கொள்ளலாம் என்றும் ஆனால் வற்புறுத்தி வலுக்கட்டாயமாக வாங்கக் கூடாது என்று மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
வாடிக்கையாளர் விருப்பம்
சர்வீஸ் சார்ஜ் என்பது வாடிக்கையாளர் விருப்பம் என்றும் வாடிக்கையாளர் அந்த ஓட்டலில் சாப்பிட்ட உணவு திருப்தியாக இருந்தால் தனது திருப்திக்காக சர்வீஸ் சார்ஜ் கொடுக்கலாம் என்றும் ஆனால் அவர்களை வலியுறுத்தக் கூடாது என்றும் ஏற்கனவே கடந்த மாதம் மத்திய அரசு ஹோட்டல் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தி இருந்தது. ஆனால் இந்த அறிவுறுத்தலை மீறி, தொடர்ந்து நாடு முழுவதும் பல ஓட்டல்கள் மற்றும் ரெஸ்டாரண்ட்களில் சர்வீஸ் சார்ஜ் வசூலிக்கப்பட்டு வருவதாக வந்த தகவலை அடுத்து தற்போது இந்த உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது.
நுகர்வோர் விவகாரத்துறை
இந்த விவகாரம் குறித்து மத்திய நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சகத்தின் செயலாளர் ரோகித் குமார் தலைமையில் நடந்த ஆலோசனையில் ‘ஹோட்டல்களில் வாடிக்கையாளர்களிடம் வலுக்கட்டாயமாக வழங்குவதாக புகார் வந்தால் சம்பந்தப்பட்ட ஹோட்டல் நிர்வாகத்தின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து பிறப்பித்த உத்தரவில், ‘ஹோட்டல்கள், ரெஸ்டாரெண்ட்களில் சர்வீஸ் சார்ஜ் வாங்குவது சட்டவிரோதம் என்றும் நியாயமற்றது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஹோட்டல்கள் மற்றும் ரெஸ்டாரெண்ட்களில் வாடிக்கையாளர்களிடம் இருந்து சர்வீஸ் சார்ஜ் வசூலிப்பதை முடிவுக்கு கொண்டுவர தனியாக சட்டம் இயற்றவும் மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நீதிமன்றம்
இதுகுறித்து இந்திய தேசிய ஹோட்டல்கள் மற்றும் ரெஸ்டாரண்ட் கூட்டமைப்பு தலைவர் கூறுகையில் ‘ஹோட்டல்களில் சர்வீஸ் சார்ஜ் வெளிப்படையாகத்தான் வசூலிக்கப்படுகிறது என்றும் இந்த கட்டணத்தை நீதிமன்றமே வரவேற்று உள்ளது என்றும் இந்த சர்வீஸ் சார்ஜில் இருந்துதான் மத்திய அரசுக்கும் வருமானம் கிடைக்கிறது என்றும் தெரிவித்தார். ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள நுகர்வோர் அமைச்சக அதிகாரிகள் எந்த நீதிமன்றமும் சர்வீஸ் சார்ஜ் வசூலிப்பதை வரவேற்கவில்லை என்றும் அவ்வாறு எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
Stop levying service charge, it’s illegal, govt tells eateries
Stop levying service charge, it’s illegal, govt tells eateries | ஹோட்டலில் சர்வீஸ் சார்ஜ் கேட்டா இனி கொடுக்காதீங்க: மத்திய அரசு அறிவிப்பு