100 அடி ஆழ கல்குவாரியில் கவிழ்ந்த பள்ளி பஸ்: அதிர்ஷ்டவசமாக மாணவர்கள் இல்லை| Dinamalar

பெங்களூரு: பள்ளி மாணவர்களை அழைத்து சென்ற பஸ், கல்குவாரியில் தவறி விழுந்தது. ஓட்டுனர் படுகாயமடைந்தார்.

கர்நாடக மாநிலம், பெங்களூரு எச்.எஸ்.ஆர்., லே – அவுட்டின், ‘ப்ரீடம் இண்டர்நேஷனல் ஸ்கூல்’ பள்ளியை சேர்ந்த பஸ், நேற்று காலை மாணவர்களை அழைத்து வர, சென்று கொண்டிருந்தது. கூட்லு அருகில் செல்லும் போது, கட்டுப்பாட்டை இழந்த பஸ், சாலை ஓரம் இருந்த 100 அடிக்கும் அதிகமான ஆழம் கொண்ட கல்குவாரியில் விழுந்தது.

இதில் ஓட்டுனர் பலத்த காயமடைந்து, சிகிச்சை பெறுகிறார். பஸ்சில் மாணவர்கள் இல்லாததால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. சாலையோரம் உள்ள, இந்த கல்குவாரியை மூடும்படி, பொது மக்கள் வலியுறுத்தியும், மாநகராட்சி அக்கறை காண்பிக்கவில்லை.இதுவே மக்களுக்கு அபாயத்தை ஏற்படுத்துவதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.