டெல்லிவரி லிமிடெட் பங்குகள் பங்குச்சந்தையில் ரூ.586 என பட்டியல் இடப்பட்ட நிலையில் ஆரம்பத்திலேயே 9 சதவீதம் உயர்ந்து ரூ.617க்கு வர்த்தகமானது.
இந்நிறுவனத்திற்கு மேலும் முதலீடுகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் 12 சதவீதம் உயர்ந்தது.
இந்த ஆண்டு மே 24ஆம் தேதி அன்று பட்டியலிடப்பட்ட இந்த நிறுவனத்தின் பங்கு முதல் நாளில் இருந்தே லாபத்துடன் வர்த்தகமாகி வருகிறது.
தொடர் உயர்வில் தங்கம்.. இப்போது தங்கம் வாங்குவது சரியா..?!
டெல்லிவரி
தற்போதைய நிலையில், டெல்லிவரி அதன் வெளியீட்டு விலையான ஒரு பங்கின் விலை ரூ.487ஐ விட 20 சதவீதம் அதிகமாக உள்ளது. அறிமுகமான நாளிலேயே இந்நிறுவனத்தின் பங்கு 474 ரூபாயை எட்டியது.
காலாண்டு முடிவு
டெல்லிவரி நிறுவனத்தின் இந்த ஆண்டு காலாண்டு முடிவுகளை பார்க்கும்போது இந்நிறுவனத்தின் முதலீடுகளில் பெரும்பாலானவை வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கவனம்
முதலீடுகளை அதிகரிப்பது, செயல் திறனை அதிகரிப்பது, டெலிவரி செலவைக் குறைப்பது மற்றும் டெலிவரிக்கான நேரத்தைக் குறைப்பது ஆகியவற்றில் இந்நிறுவனம் கவனம் செலுத்தி வருகிறது.
பார்சல் பிரிவு
டெலிவரியின் எக்ஸ்பிரஸ் பார்சல் பிரிவு இந்த காலாண்டில் 101 சதவிகிதம் வளர்ச்சியடைந்துள்ளது. மற்ற போட்டி நிறுவனங்களின் வளர்ச்சியை விட இது 40 சதவிகிதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
வளர்ச்சியும் லாபமும்
டெல்லிவரி இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாகி சாஹில் பருவா மற்றும் தலைமை வணிக அதிகாரி சந்தீப் பராசியா ஆகியோர் நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து கூறியபோது, ‘வளர்ச்சியும் லாபமும் ஒரு நிறுவனத்திற்கு முக்கியம் என்று கூறியுள்ளனர்.
ரூ.2000 கோடி
டெல்லிவரி நிறுவனம் ஐபிஓ மூலம் ரூ. 2,000 கோடி நிதி பெற்றுள்ளதாகவும் அதில் ரூ. 1,000 கோடியை கனிம வளர்ச்சி கையகப்படுத்துதல் வகைக்கும் மீதமுள்ள ரூ. 1,000 கோடி பொது நிறுவன நோக்கங்களுக்காகவும் பயன்படுத்தி கொள்ள திட்டமிட்டுள்ளது.
Delhivery shares surge 15%, touch their highest-ever price of ₹617
Delhivery shares surge 15%, touch their highest-ever price of ₹617 |15% உயர்ந்து உச்சத்தை தொட்டது டெல்லிவரி பங்குகள்