2020 டெல்லி கலவரம் விவகாரத்தில், ஜாமியா பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்கள் சங்க தலைவரின் ஜாமீன் மனு மீது டெல்லி காவல்துறை பதில் அளிக்குமாறு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்து உள்ளது.
டெல்லியின் ஜாமியா பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் தலைவரான ஷைபா உர் ரகுமான் என்பவர், கடந்த 2020 ஆம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற கலவரத்தில் தொடர்புடையவர் என குற்றம்சாட்டி சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டார். கடந்த ஏப்ரல் 7ம் தேதி இவருக்கான ஜாமீன் மனு கீழமை நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டிருந்த நிலையில் அதை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.
இந்த மனு இன்று டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள் சித்தார்ய் மிருதுல், ரஜ்னீஸ் பத்நாகர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த மனு மீது பதில் அளிக்குமாறு டெல்லி காவல்துறையினருக்கு நோட்டீஸ் பிறப்பித்து வழக்கின் விசாரணையை ஜூலை மாதத்திற்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க… ராமநாதீசுவரர் கோவிலின் சொத்துக்கள் ஆக்கிரமிப்பு – உரிய நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவுSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM