நாட்டில் தற்போது மொத்தமாக 65 ஆயிரத்து 818 மெட்ரிக் தொன் (MT) எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர உறுதிப்படுத்தியுள்ளார்.
அதன்படி, சிலோன் பெட்ரோலியம் ஸ்டோரேஜ் டெர்மினல்ஸ் லிமிடெட் (CPSTL) தரவுகளின் படி, 33 ஆயிரத்து 498 மெற்றிக் தொன் Octane 92 பெற்றோலும், 13 ஆயிரத்து 67 மெற்றிக் தொன் Octane 95 பெற்றோலும், 18 ஆயிரத்து 825 மெற்றிக் தொன் டீசலும் 42 மெற்றிக் தொன் சுப்பர் டீசலும் அரசாங்கத்திடம் கையிருப்பில் உள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், அரசாங்கம் 386 மெற்றிக் தொன் ஜெட் ஏ1 எரிபொருளை கொள்முதல் செய்துள்ளதாகவும்,, தற்போது தேவையான டீசலின் ஒரு தொகுதியும் இறக்கப்பட்டு வருவதாக விஜேசேகர மேலும் தெரிவித்துள்ளார்.
கடந்த மூன்று மாத காலமாக தடைப்பட்டிருந்த சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்,கடந்த திங்கட்கிழமை (30) மீண்டும் தனது செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுருந்தார்.