BSNL Recharge: டெலிகாம் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை ஈர்க்க பல்வேறு திட்டங்களை வழங்குகின்றன. இந்த திட்டங்கள் வரம்பற்ற அழைப்பு, இலவச டேட்டா, ஓடிடி அணுகல் போன்ற பலன்களை வழங்குகின்றன.
ஜியோ, ஏர்டெல், வோடபோன்-ஐடியா ஆகிய நிறுவனங்கள் தொடர்ந்து போட்டியில் இருக்கின்றன. ஆனால், மலிவான திட்டத்திற்கு வரும்போது, ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா பெயர்கள் மேலே வராது.
ஏனென்றால், அரசுக்குச் சொந்தமான பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் மலிவு விலைத் திட்டங்களை வழங்குவதில் முதலிடத்தில் உள்ளது. இந்த நிறுவனம் பல ரீசார்ஜ் திட்டங்களை வழங்குகிறது.
இது பயனர்களுக்கு பல நன்மைகளை அளிக்கிறது. BSNL அத்தகைய ஒரு திட்டத்தை கொண்டுள்ளது. இதன் விலை வெறும் ரூ.22 மட்டும் தான். அதோடு 90 நாள்கள் வேலிடிட்டியும் வழங்கப்படுகிறது. இந்த திட்டம் குறித்த கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ளவும்.
Recharge Price Hike: தீபாவளி பரிசா இது! ரீசார்ஜ் செய்ய கூடுதல் பணம்!
பிஎஸ்என்எல் ரூ.22 ரீசார்ஜ் (BSNL 22 rs plan)
இந்த திட்டத்தின் விலை ரூ.22 ஆகும். இதில் உங்களுக்கு 90 நாள்கள் முழு வேலிடிட்டி கிடைக்கும். இது ஒரு குரல் அழைப்பு திட்டமாகும். உள்ளூர் மற்றும் தேசிய அழைப்புகளுக்கு நிமிடத்திற்கு 30 பைசா வசூலிக்கப்படும்.
BSNL Recharge: ஜியோவை விரட்டியடிக்கும் பிஎஸ்என்எல்-இன் அதிரடி ரீசார்ஜ் திட்டங்கள்!
இங்கே கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், இந்த திட்டம் எல்லா மாநிலங்களிலும் இல்லை. அப்படியானால், ரீசார்ஜ் செய்வதற்கு முன், அது எங்கு கிடைக்கிறது என்பதை நீங்கள் சரிபார்க்க வேண்டும்.
டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் நன்மைகள் இந்த திட்டத்தில் கொடுக்கப்படவில்லை. நீங்கள் செல்லுபடியாகும் காலத்தை மட்டும் கருத்தில் கொள்பவராக இருந்தால், இந்த திட்டத்தில் நீங்கள் இணையலாம்.
6G வருகையுடன் ஸ்மார்ட்போன் காலம் முடிவுக்கு வருமா?
இந்த விலையில் ஜியோ-ஏர்டெல் என்ன திட்டங்களை வழங்குகிறது?
ஜியோ ரூ.25 ரீசார்ஜில் 4ஜி டேட்டா வவுச்சர் கிடைக்கிறது. இந்த திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் என்பது உங்கள் ஆக்டிவ் பிளான் போலவே இருக்கும். இந்த திட்டத்தில் 2ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இந்த டேட்டா தீர்ந்த பிறகு உங்களுக்கு 64Kbps வேகத்தில் டேட்டா வழங்கப்படும்.
செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ் ‘சமயம் தமிழ்’ பக்கத்தை பின் தொடருங்கள்
ஏர்டெல் நிறுவனம் ரூ.19 ரீசார்ஜிற்கு ஒரு நாள் வேலிடிட்டியுடன் 1ஜிபி டேட்டாவை வழங்குகிறது. அதே நேரத்தில், கூடுதலாக ரூ.20 ரூபாய் ரீசார்ஜும் உள்ளது. இதில் உங்களுக்கு ரூ.14.95 டாக் டைம் வழங்கப்படும்.
வோடபோன்-ஐடியா சேவையில், ரூ.19க்கு ரீசார்ஜ் செய்தால் 1 நாள் வேலிடிட்டியுடன் 1 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. அதே நேரத்தில், ரூ.20 ரீசார்ஜ் வவுச்சர் மூலம் ரூ.14.95 டாக் டைம் கிடைக்கிறது.