முன்பெல்லாம் ஒருவருக்கு பணம் அனுப்ப வேண்டுமென்றால் அஞ்சல் நிலையத்தில் மணியாடர் என்ற ஒரு வசதி மட்டும் தான் இருந்தது.
ஆனால் காலப்போக்கில் தொழில்நுட்பங்கள் வளர வளர ஆன்லைன் மூலமே சிறிய தொகையிலிருந்து எத்தனை கோடி வேண்டுமானாலும் பரிவர்த்தனை செய்து கொள்ளலாம் என்ற வசதி வந்தது.
குறிப்பாக வங்கிகள் NEFT மற்றும் RTGS என்ற சேவைகளை தொடங்கியவுடன் பணம் அனுப்புவது மிகவும் எளிதாக இருந்தது.
NEFT மற்றும் RTGS
அதுமட்டுமின்றி NEFT மற்றும் RTGS மூலம் பணம் அனுப்புவதற்கான கட்டணமும் குறைவாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கத��. இதனால் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு சம்பளம் அனுப்புவது முதல் தனியார்கள் பணத்தை இன்னொருவருக்கு அனுப்புவது வரை இந்த சேவையை பயன்படுத்தி வந்தன.
கட்டண உயர்வு
இந்த நிலையில் இந்த சேவைக்கு மிகக் குறைந்த கட்டணம் மட்டுமே வங்கிகள் பெற்று வந்த நிலையில் தற்போது படிப்படியாக அந்த கட்டணத்தை உயர்த்துவது வங்கி பயனாளருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பஞ்ச���ப் நேஷனல் வங்கி
அந்த வகையில் இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கி தற்போது ஆன்லைன் பரிவர்த்தனைகளை NEFT மற்றும் RTGS ஆகியவற்றுக்கு கட்டணத்தை உயர்த்தி உள்ளதாக வந்திருக்கும் செய்தி அந்த வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன.
ஆன்லைன் பரிவர்த்தனை
24 மணி நேரமும் ஆன்லைன் மூலம் பணப்பரிவர்த்தனைக்கு பயன்படும் NEFT மற்றும் RTGS சேவைக்கு பஞ்சாப் நேஷனல் வங்கி கட்டணத்தை உயர்த்தி உள்ளது. இந்த கட்டண உயர்வு குறித்து தற்போது பார்க்கலாம்.
RTGS-க்கு எவ்வளவு உயர்வு?
வங்கிக் கிளையில் நேரடியாக ஆர்டிஜிஎஸ் பரிவர்த்தனை செய்தால் அதற்கான கட்டணம் 24.50 ரூபாயாகவும், ஆன்லைனில் RTGS பரிவர்த்தனைக்கு 24 ரூபாயாகவும் பஞ்சாப் நேஷனல் வங்கி கட்டணத்தை உயர்த்தியுள்ளது. 2 லட்சம் ரூபாய் முதல் 5 லட்சம் ரூபாய��� வரையிலான பரிவர்த்தனைகளுக்கு இந்தக் கட்டணம் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
NEFT -க்கு எவ்வளவு உயர்வு?
அதேபோல் NEFT பரிவர்த்தனைகளுக்கான கட்டணத்தையும் பஞ்சாப் நேஷனல் வங்கி உயர்த்தியுள்ளது. அதன்படி 10,000 ரூபாய் வரையிலான NEFT பரிவர்த்தனைகளுக்கு 2.25 ரூபாய் எனவும், 10,000 ரூபாய் முதல் 1 லட்சம் ரூபாய் வரையிலான பரிவர்த்தனைகளுக்கு 4.75 ரூபாய் எனவும் உயர்த்தப்பட்டுள்ளது.
அதிருப்தி
மேலும் ஒரு லட்சம் முதல் 2 லட்சம் ரூபாய் வரையிலான பரிவர்த்தனைகளுக்கு 14.75 ரூபாய் எனவும், 2 லட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட பரிவர்த்தனைகளுக்கு 24.75 ரூபாய் எனவும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு பஞ்சாப் நேஷனல் வங்கி வாடிக்கையாளர்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Punjab National Bank Hikes Service Charges On NEFT, RTGS
NEFT, RTGS-ல் பணம் அனுப்ப போறீங்களா? உங்களுக்கு ஒரு ஷாக்கிங் நியூஸ் |Neft, rtgs, punjab national bank, நெஃப்ட், ஆர்.டி.ஜி.எஸ், கட்டணம்,