அதானியின் அடுத்த ஆட்டம்: ரூ.1,913 கோடி எஸ்ஸார் பவர் டிரான்ஸ்மிஷனை வாங்குகிறார்

அதானி குழுமம் எஸ்ஸார் பவர் டிரான்ஸ்மிஷன் லைனை ரூ.1,913 கோடிக்கு வாங்கவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய தனியார் துறை டிரான்ஸ்மிஷன் மற்றும் விநியோக நிறுவனமான அதானி டிரான்ஸ்மிஷன் லிமிடெட் (ATL) நேற்று மஹான்-சிபாட் டிரான்ஸ்மிஷன் லைனை ரூ.1,913 கோடிக்கு வாங்க எஸ்ஸார் பவர் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

மஹான்-சிபாட் டிரான்ஸ்மிஷன் லைன் 673 கி.மீ. தூரம் செயல்பாட்டில் உள்ளது. ஒருசில மாநிலங்களுக்கு இடையேயான டிரான்ஸ்மிஷன் திட்டம் எஸ்ஸார் பவர் டிரான்ஸ்மிஷன் லிமிடெட் நிறுவனத்திற்கு சொந்தமானது. இந்த நிலையில் இந்த டிரான்ஸ்மிஷன் லைனை ரூ. 1,913 கோடி என்று அதானி டிரான்ஸ்மிஷன் லிமிடெட் வாங்கியுள்ளது.

எஸ்ஸார் டிரான்ஸ்மிஷன் லைனை கையகப்படுத்துவதன் மூலம் மத்திய இந்தியாவில் அதானி நிறுவனம் நுழைகிறது. இந்த ஒப்பந்தம் மூலம், அதானி டிரான்ஸ்மிஷன் லிமிடெட் தனது இலக்கை முன்னதாகவே அடைகிறது.

ஸ்டார்ட்அப் நிறுவனங்களை கழுவி ஊற்றிய இன்போசிஸ் நாராயணமூர்த்தி.. என்ன காரணம்..?

அதானி டிரான்ஸ்மிஷன் லிமிடெட்

அதானி டிரான்ஸ்மிஷன் லிமிடெட்

இதுகுறித்து அதானி டிரான்ஸ்மிஷன் லிமிடெட் மேனேஜிங் டைரக்டர் மற்றும் சி.இ.ஓ அனில் சர்தானா அவர்கள் கூறியபோது, ‘ இந்த திட்டம் மூலம் எங்கள் இலக்கு பூர்த்தியாகி உள்ளது என்றும், மத்திய பிரதேசத்தில் உள்ள மஹான் மற்றும் சத்தீஸ்கரில் உள்ள சிபாட் பூலிங் துணை மின் நிலையத்தை இணைக்கும் 400 kV இன்டர்-ஸ்டேட் டிரான்ஸ்மிஷன் லைன் எங்கள் வசமாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

ஒப்புதல்கள்

ஒப்புதல்கள்

இந்தத் திட்டம் மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் நெறிமுறைப்படுத்தப்பட்ட வருவாய் கட்டமைப்பின் கீழ் செயல்படுகிறது இந்த திட்டத்திற்கு தேவையான ஒழுங்குமுறை ஒப்புதல்கள் மற்றும் பிற ஒப்புதல்களுக்கு முறைப்படி செயல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒப்பந்தம்
 

ஒப்பந்தம்

இந்த புதிய டிரான்ஸ்மிஷன் லைனை அதானி டிரான்ஸ்மிஷன் லிமிடெட் பெற்றதன் மூலம் அதானி டிரான்ஸ்மிஷன் லிமிடெட் மதிப்பு ம்ற்றும் வளர்ச்சி உயரும் என்றும் கூறப்படுகிறது. இந்த ஒப்பந்தத்திற்கு பின்னர் அதானி டிரான்ஸ்மிஷன் லிமிடெட் நிறுவனத்தின் ஒட்டுமொத்த நெட்வொர்க் 19,468 ckt kms என்றும், அதில் 14,952 ckt kms செயல்படும் மற்றும் 4,516 ckt kms பல்வேறு நிலைகளில் செயல்படுத்தப்படுகிறது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல்

சுற்றுச்சூழல்

“நாட்டின் மிகப்பெரிய தனியார் துறை பரிமாற்றம் மற்றும் விநியோக நிறுவனமாக அதானி டிரான்ஸ்மிஷன் லிமிடெட் நிறுவனத்தின் செயல்பாட்டு சிறப்புக் கட்டமைப்பின்படி, சுற்றுச்சூழல், சமூகம் மற்றும் ஆளுகை (ESG) அம்சங்களின் மிக உயர்ந்த தரத்திற்கு அர்ப்பணிப்புடன் செயல்படுத்தப்படும் என்றும் அதானி டிரான்ஸ்மிஷன் லிமிடெட் நிறுவனம் கூறியுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Adani Group To Buy Essar Power’s Transmission Line For ₹ 1,913 Crore

Adani Group To Buy Essar Power’s Transmission Line For ₹ 1,913 Crore | அதானியின் அடுத்த ஆட்டம்: ரூ.1,913 கோடி எஸ்ஸார் பவர் டிரான்ஸ்மிஷனை வாங்குகிறார்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.