புதுச்சேரி : அழகு நிலையத்தில் விபசாரம் நடத்தியது தொடர்பாக உரிமையாளர் உள்ளிட்ட இருவரை போலீசார் கைது செய்தனர். நான்கு பெண்களை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.சாரம், பிள்ளை தோட்டம், காமராஜ் சாலையில் உள்ள அழகு நிலையத்தில் விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் உருளையன்பேட்டை இன்ஸ்பெக்டர் பாபுஜி மற்றும் போலீசார் அழகு நிலையத்தில் அதிரடி சோதனை நடத்தினர்.
அதில், அங்கு விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்டிருந்த நான்கு பெண்களை மீட்டனர். இதுதொடர்பாக அழகு நிலைய உரிமையாளரான குயவர்பாளையம் லெனின் வீதியை சேர்ந்த தெய்வநாயகம்,45; வாடிக்கையாளரான ரெட்டியார்பாளையத்தை சேர்ந்த ஆனந்த் (எ) அடைக்கலசாமி,41; ஆகிய இருவரையும் கைது செய்தனர்.அவர்களிடம் இருந்து 9 மொபைல் போன் மற்றும் ரொக்கம் ரூ.2,000 பறிமுதல் செய்தனர். மீட்கப்பட்ட நான்கு பெண்களையும் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
புதுச்சேரி : அழகு நிலையத்தில் விபசாரம் நடத்தியது தொடர்பாக உரிமையாளர் உள்ளிட்ட இருவரை போலீசார் கைது செய்தனர். நான்கு பெண்களை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.சாரம், பிள்ளை தோட்டம்,
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.