கொழும்பு:
கடந்த 2016-ம் ஆண்டில் இந்தியா வழங்கிய ரூ.58 கோடி நிதியில் இலங்கையில் சுவா செரியா ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டது. இத்துடன் இந்தியா இலவசமாக ஆம்புலன்ஸ் வாகனங்களையும் வழங்கியுள்ளது.
இந்நிலையில் இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
இலங்கை மக்களுக்கு இந்தியா அளித்த மற்றுமொரு வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த மார்ச்சில் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் இலங்கை வந்தபோது மருந்துகள் பற்றாக்குறை குறித்து சுவா செரியா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதற்கு ஆவன செய்வதாக மந்திரி உறுதி அளித்தார்.
அதன்படி 3,300 கிலோ மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை இந்தியா வழங்கியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.