உக்ரைனின் டான்பாஸ் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலின் போது மேஜர் ஜெனரலாக இருந்த கனமட் போடாஷேவ்-வை(63) ரஷ்யா இழந்துள்ள நிலையில், அவர் இறப்பதற்கு முந்தைய இறுதி நிமிடங்களின் வீடியோ இன்று வெளியாகியுள்ளது.
உக்ரைன் ரஷ்யா போரானது 100 நாள்களை கடந்து தொடர்ந்து நடைப்பெற்று வரும் நிலையில், உக்ரைனின் கிழக்கு பகுதிகளை முழுவதுமாக கைப்பற்றும் முயற்சியில் ரஷ்ய ராணுவம் தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளது.
அந்தவகையில் உக்ரைனின் கிழக்கு பகுதி நகரான டான்பாஸில் ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்திய போது, உக்ரைன் ராணுவம் நடத்திய எதிர்ப்பு தாக்குதலில் ரஷ்ய விமானப்படையின் மூத்த மற்றும் இரண்டு கப்பல் விமானக் குழுவின் தலைவரான மேஜர் ஜெனரல் போடாஷேவ்-வை ரஷ்யா கடந்த மே 24ல் பறிகொடுத்தது.
Video reportedly of Botashev’s last flight over the Donbas before he was shot down. 5/https://t.co/kGF7Kb1gYv pic.twitter.com/P247QmpUlL
— Rob Lee (@RALee85) June 3, 2022
இதுத் தொடர்பாக ரஷ்ய ராணுவம் வெளியிட்ட தகவலில், உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டு இருந்தபோது மேஜர் ஜெனரல் போடாஷேவ் பயணித்த 9 மில்லியன் பவுண்ட் மதிப்புள்ள Su-25 போர் விமானத்தை உக்ரைனின் தரை ஏவுகணைக் குழு தாக்கி அழித்ததில் உயிரிழந்தார் எனத் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், போடாஷேவின் இறுதிச் சடங்கு குறித்த அறிக்கையை ரஷ்ய ஊடகம் வெளியிட்ட பிறகு, ஜெனரல் கனமட் போடாஷேவின் இறுதிப் பயணம் குறித்த காணொளி உக்ரைனின் ராணுவ ஆய்வாளர் ராப் லீயாலால் அடையாளம் காண்பிக்கப்பட்டுள்ளது.
ஜெனரல் கனமட் போடாஷேவ் உக்ரைனின் ராணுவ படைகளால் சுற்றிவளைக்கப்பட்ட ரஷ்ய தரைப் படை வீரர்களை காப்பாற்றுவதற்காக லுஹான்ஸ்க் பகுதியில் மிகவும் தாழ்ந்த நிலையில் பறந்த போது, உக்ரைனின் தரை ஏவுகணைக் குழு Stinger ஏவுகணைகளை கொண்டு தாக்கி அழித்துள்ளது.
அப்போது ஜெட் விமானத்தில் இருந்து வெளியேற முடியாமல் சிக்கி கொண்ட கனமட் போடாஷேவ்(63) உயிரிழந்துள்ளார்.
கூடுதல் செய்திகளுக்கு; ஜெர்மனியில் ரயில் விபத்து…அதிகரிக்கும் பலி எண்ணிக்கை: தீவிரமடையும் மீட்புப் பணி
உக்ரைன் ரஷ்யா போர் தொடங்கியதில் இருந்து இதுவரை ரஷ்யா 10 மேஜர் ஜெனரல்கள் மற்றும் 40 கரனல்களை இழந்துள்ளது என்பது குறிப்பிடதக்கது.