உங்கள் போர் வெறிக்கு பட்டினியில் சாகும் எங்கள் மக்கள்: புடினிடம் உடைத்துப் பேசிய முக்கிய தலைவர்


உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரால் அப்பாவி ஆப்பிரிக்க மக்கள் பட்டினியால் சாவதாக விளாடிமிர் புடினிடம் ஆப்பிரிக்க ஒன்றிய தலைவர் வெளிப்படையாக பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரஷ்யாவில் ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கும் ஆப்பிரிக்க ஒன்றிய தலைவர் மேக்கி சாலுக்கும் இடையே முக்கிய சந்திப்பு நடந்துள்ளது.
இந்த நிலையில், ஆப்பிரிக்க நாடுகளுக்கான தானியங்கள் மற்றும் உரங்கள் ஏற்றுமதியை எளிதாக்குவதாக விளாடிமிர் புடின் உறுதியளித்ததாக கூறப்படுகிறது.

ஆப்பிரிக்காவில் உட்கொள்ளப்படும் 40% க்கும் அதிகமான கோதுமை பொதுவாக ரஷ்யா மற்றும் உக்ரைனில் இருந்து வருகிறது.
ஆனால் போருக்கு பின்னர் பெரும்பாலான உக்ரைன் துறைமுகங்கள் கடும் அச்சுறுத்தலில் உள்ளது.

இதற்கு உக்ரைன் மற்றும் அதன் நட்பு நாடுகள் ரஷ்யாவை குற்றஞ்சாட்டி வருகிறது. துறைமுகங்களை திறக்க மேலும் தாமதமானால் பல நாடுகள் கடும் பஞ்சத்தை எதிர்கொள்ள நேரிடும் என்ற எச்சரிக்கையை ஐக்கிய நாடுகள் மன்றவும் விடுத்துள்ளது.

உங்கள் போர் வெறிக்கு பட்டினியில் சாகும் எங்கள் மக்கள்: புடினிடம் உடைத்துப் பேசிய முக்கிய தலைவர்

தானியங்களின் பற்றாக்குறையால் சுமார் 1.4 பில்லியன் மக்கள் வேறு பகுதிகளுக்கு குடிபெயரும் நிலை ஏற்பட்டுள்ளதாக ஐ.நாவின் அந்த பொறுப்பளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பற்றாக்குறை காரணமாக விலையுயர்வு உச்சத்தை எட்டியுள்ளது. மட்டுமின்றி, உக்ரைன் மீதான போரால் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் கடும் பட்டினிக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

ஆப்பிரிக்காவில் மட்டும் 80 மில்லியன் மக்கள் அன்றாடம் உணவுக்கே அல்லல்படுவோர் எனவும், இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 50 மில்லியன் என இருந்ததாக அதிகாரிகள் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த நிலையிலேயே, செனகல் ஜனாதிபதியும் ஆப்பிரிக்க ஒன்றிய தலைவருமான மேக்கி சால், ரஷ்ய ஜனாதிபதி புடினிடம் வெளிப்படையாக பேசியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

உக்ரைன் மீதான போரினால் நேரிடையாக பாதிக்கப்படவில்லை என்றாலும், ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகளால் மறைமுகமாக ஆப்பிரிக்க மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.