மதுரை திருமங்கலம் அருகே விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரரின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது குடும்பத்தார் 20 கிராமத்தினர் பயனுறும் வகையில் இலவச ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தியை அர்ப்பணித்தனர்.
சின்ன உலகாணி கிராமத்தை சேர்ந்த பாலமுருகன் என்பவர் இந்திய ராணுவ வீரராக பணியாற்றி வந்த நிலையில் கடந்த 2016-ம் ஆண்டு விடுமுறை முடிந்து பணிக்கு திரும்பும் போது திருமங்கலம் அருகே அரசு பேருந்து மோதி உயிரிழந்தார்.
அவரது 29 வது பிறந்தநாளை ஒட்டி ஊர்திகள் சேவையை துவக்கி வைத்த குடும்பத்தார் அதற்காக மக்கள் தொடர்பு கொள்ள வேண்டிய எண்களையும் வழங்கினர்.