உலகின் எரிசக்தி நெருக்கடி அதிகரிக்கும்…ஐரோப்பிய நாடுகளின் பொருளாதரா தடைகளுக்கு புடின் எச்சரிக்கை!


ரஷ்ய எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்கள் மீது ஐரோப்பிய நாடுகள் விதித்துள்ள புதிய பொருளாதார தடைகள் உலகின் எரிசக்தி நெருக்கடிக்கு வழிவகுக்கும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் அத்துமீறிய ராணுவ நடவடிக்கைகளை எதிர்த்து மேற்கத்திய மற்றும் ஐரோப்பிய நாடுகள் பலஅடுக்கு பொருளாதார தடைகளை அடுத்தடுத்து விதித்து வந்த நிலையில், ரஷ்ய எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்களின் மீது ஐரோப்பிய யூனியன் நாடுகள் புதிய தடைகளை அறிவித்துள்ளன.

இந்தநிலையில், ஐரோப்பிய நாடுகளின் புதிய தடைகள் குறித்து ரஷ்ய ஜனாதிபதி விளாடிமர் புடின் தெரிவித்துள்ள தகவலில், ரஷ்ய எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்கள் மீது ஐரோப்பிய நாடுகள் விதித்துள்ள புதிய பொருளாதார தடைகள் உலகின் எரிசக்தி நெருக்கடிக்கு வழிவகுக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உலகின் எரிசக்தி நெருக்கடி அதிகரிக்கும்...ஐரோப்பிய நாடுகளின் பொருளாதரா தடைகளுக்கு புடின் எச்சரிக்கை!

இதற்கு முன்னதாக உணவு நெருக்கடி குறித்து அவர் தெரிவித்த சமீபத்திய கருத்தில், உலகின் உணவு நெருக்கடி ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கைக்கு முந்தைய தொற்றுக் காலத்தில் இருந்தே உருவாகியதாக தெரிவித்தார்.

அத்துடன் இந்த பொருளாதார தடைகள் உலகளாவிய உர தேவையின் நிலைமையும் மோசமடைய செய்வதுடன், உலக அளவில் உணவு பொருள்களின் விலையையும் உயர்த்தும் என தெரிவித்துள்ளார்.

உலகின் எரிசக்தி நெருக்கடி அதிகரிக்கும்...ஐரோப்பிய நாடுகளின் பொருளாதரா தடைகளுக்கு புடின் எச்சரிக்கை!

கூடுதல் செய்திகளுக்கு: தயார் நிலையில் உலகின் அதிநவீன சீனப் போர் கப்பல்: வெளியான புதிய செயற்கைக்கோள் புகைப்படங்கள்!

மேலும் உக்ரைனிய தானியங்களை ரஷ்ய படைகள் தடுப்பதாக எழுந்த குற்றச்சாட்டை மறுத்த புடின், உக்ரைனில் டஜன் கணக்கான வெளிநாட்டு கப்பல்கள் நிலைநிறுத்தப்பட்டு உள்ளன என்றும், கோதுமை உற்பத்தியை 50 மில்லியன் டன்களாக உயர்த்த ரஷ்யா தயராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.     

உலகின் எரிசக்தி நெருக்கடி அதிகரிக்கும்...ஐரோப்பிய நாடுகளின் பொருளாதரா தடைகளுக்கு புடின் எச்சரிக்கை!



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.