உலக சுற்றுச்சூழல் தினம் | "மண் காப்போம் இயக்கம்" குறித்த நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்பு

புதுடெல்லி: உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு இன்று (ஞாயிற்றுக்கிழமை) சத்குரு ஜக்கி வாசுதேவ் தொடங்கியுள்ள “மண் காப்போம் இயக்கம்” குறித்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அரசு செய்திக்குறிப்பில், உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு இன்று விஞ்ஞான் பவனில் நடைபெறும் “மண் காப்போம் இயக்கம்” குறித்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.

‘மண் காப்போம்‘ என்பது, பாழ்பட்டு வரும் மண் வளம் குறித்த உலகளாவிய விழிப்புணர்வு இயக்கம். அது மண்ணை மேம்படுத்த உளப்பூர்வ நடவடிக்கை எடுப்பதற்காக மேற்கொள்ளப்படுகிறது. மார்ச் 2022-ல் இந்த இயக்கத்தைத் தொடங்கிய சத்குரு ஜக்கி வாசுதேவ், மோட்டார் சைக்கிளில், 27நாடுகளில் 100நாள் பயணம் மேற்கொண்டுள்ளார்.

இன்று (ஜுன்-5) இந்த பயணத்தின் 75-வது நாள் ஆகும். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்பது, இந்தியாவில் மண் வளத்தை மேம்படுத்துவதற்கான உறுதிப்பாடு மற்றும் பகிர்ந்து கொள்ளப்பட்ட அக்கறையின் பிரதிபலிப்பாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.