டெல்லிக்கு அருகில் உள்ள உத்தரப் பிரதேசத்தின் ஹபூர் மாவட்டத்தில் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
உத்தரப் பிரதேசத்தின் ஹபூர் மாவட்டத்தில் டோலானா என்ற இடத்தில் உள்ள தனியார் ரசாயன தொழிற்சாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. உடனடியாக தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் அனுப்பப்பட்டு, அவர்கள் தீயை அணைத்து, தீயில் சிக்கியிருந்த தொழிலாளர்களை மீட்கும் பணிகளில் ஈடுபட்டனர். இருப்பினும், இதுவரை எட்டு தொழிலாளர்கள் இந்த தீ விபத்தில் உயிரிழந்து இருக்கக்கூடிய நிலையில் ஏராளமான தொழிலாளர்கள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொழிற்சாலையில் தொடர்ந்து எரிந்துவரும் தீயை அணைக்கும் அனைத்து முயற்சிகளிலும் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்துள்ள உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், அரசு அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப்பணிகள் மற்றும் விசாரணையை துரிதமாக மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார். மேலும் விபத்திற்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM