பிரடிஸ்லவா:உக்ரைன் விவகாரத்தில் ஐரோப்பிய கூட்டமைப்பு கபட நாடகம் போடுவதாக, நம் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.
மத்திய ஐரோப்பாவின் சுலோவேக்கியாவில், உக்ரைன் விவகாரம் உள்ளிட்டவை தொடர்பாக விவாதிக்கும், ‘குளோப்செக் 2022’ மாநாடு நடந்தது. இதில், நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பேசியதாவது:இந்தியா, ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதை ஐரோப்பிய நாடுகள் எதிர்ப்பது சரியல்ல. உக்ரைன் போர் காரணமாக அமெரிக்காவும், மேற்கத்திய நாடுகளும் சர்வதேச எரிபொருள் சந்தையை ஒரு வட்டத்திற்குள் அடக்கி விட்டன.
ஈரான், வெனிசுலா நாடுகள் கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்ய ஏன் அனுமதிக்கப்படவில்லை என கேட்க விரும்புகிறேன்.ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதால் மட்டுமே உக்ரைன் போருக்கு இந்திய ரூபாய் பயன்படுவதாக கூற முடியுமா? அப்படி பார்த்தால் ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவிடம் இயற்கை எரிவாயுவை வாங்குவதை, உக்ரைன் போருக்கு யூரோ கரன்சி பயன்படுவதாககூறலாம் அல்லவா?
ஒருபுறம் ரஷ்யாவை கண்டிக்கும் ஐரோப்பிய நாடுகள், மறுபுறம் ‘ரஷ்யாவின் எண்ணெய் தேவை’ என குரலெழுப்ப மக்களை துாண்டுகின்றன. இதுபோன்று கபட நாடகம் போடக் கூடாது. இவ்வாறு அவர் பேசினார்.
Advertisement