கரூரைச் சேர்ந்த பனியன் ஏற்றுமதியாளரிடம் ஒன்றேகால் கோடி ரூபாய் மதிப்பிலான நூலை பெற்று கொண்டு மோசடி செய்த புகாரில், பல்லடம் அதிமுக நகர செயலாளர் ராமமூர்த்தி என்பவரை போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்து போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, “போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: ”மண்மங்கலம் வட்டம், செம்மடையை சேர்ந்தவர் அசோக் ராம்குமார் (40 வயது). இவர் கரூரில் பனியன் ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் பல்லடம் அதிமுக நகர செயலாளர் ராமமூர்த்தி (40 வயது) நடத்தி வருகிற சங்கீதா மில்ஸ் நிறுவனத்தில் நூல் கொடுத்து, துணியாக மாற்றி வந்துள்ளார்.
கடந்த 2020-ம் ஆண்டு 1 லட்சம் கிலோ நூலை (இந்த நூலின் மதிப்பு ரூ.1.25 கோடியாகும்), துணியாக மாற்றி தரும்படி ராமமூர்த்தியிடம் அசோக் ராம்குமார் கொடுத்துள்ளார். ஆனால், நூலை பெற்றுக்கொண்டு ராமமூர்த்தி துணியாக மாற்றி தராமல் இழுத்தடித்து வந்து வந்துள்ளார்.
அசோக் ராம்குமார் கேட்கும் போது, அவரை ராமமூர்த்தி மிரட்டியுள்ளார். தொடர்ந்து மோசடியில் ஈடுபட்ட பல்லடம் அ.தி.மு.க. நகர செயலாளர் ராமமூர்த்தி மீது நடவடிக்கை எடுக்கும்படி திருப்பூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் அசோக் ராம்குமார் புகார் கொடுத்தார்.
அதன்படி ராமூர்த்தி மீது கடந்த 30-ம் தேதி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில், ராமமூர்த்தியை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். மேலும், ராமமூர்த்தியின் மில்லில் காசளராக பணியாற்றிய சங்கர் கணேஷ் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.