திமுக ஆட்சி பொறுப்பேற்று ஓராண்டை நிறைவு செய்திருக்கிறது. ஓராண்டில் திமுக ஆட்சி குறித்த கருத்துக்கணிப்பை புதிய தலைமுறை தொலைக்காட்சி நடத்தியது. அதில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில், தலைமையின் செயல்பாடுகள் மற்றும் மக்களை கவர்ந்த திட்டங்கள் என்னென்ன? மக்களுடைய மதிப்பீடு என்னென்ன? என்பது குறித்த கேள்விகளும், எதிர்க்கட்சிகளுடைய செயல்பாடுகள் எப்படியிருக்கின்றன? எந்தெந்த தலைவர்களுக்கு மக்கள் மத்தியில் அதிக ஆதரவு இருக்கிறது? இளைஞர்கள் மத்தியில் எந்தெந்த தலைவர்களுக்கு ஆதரவு இருக்கிறது என்பது குறித்த தகவல்களும் இந்த கருத்துக்கணிப்பில் இடம்பெற்றுள்ளன. மேலும் மக்கள் இந்த அரசுக்கு எவ்வளவு மதிப்பெண்கள் வழங்கியுள்ளனர் என்பது குறித்த விவரங்களும் இடம்பெற்றுள்ளன.
அதில் பெட்ரோல், டீசல் விலையேற்றத்தை எப்படி சமாளித்தீர்கள்? என்ற கேள்விக்கு மக்கள் அளித்த பதில்களின் சதவீதம் முறையே,
அதற்கு, பிற செலவுகளைக் குறைத்துவிட்டோம் என்று கூறுபவர்கள் – 18.00%
மாத வரவு செலவைப் பாதித்தது என்று கூறுபவர்கள் – 48.44%
போக்குவரத்து முறையை மாற்றியவர்கள் – 9.05%
பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துபவர்கள் – 10.75%
பாதிப்பு இல்லை என்பவர்கள் – 4.66%
பிற கருத்துகள் -முன்வைத்தவர்கள் 6.68%
தெரியாது / கூற இயலாது என்றவர்கள் – 2.41%
நடப்புத் தேர்தல் முறைகளில் மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என்று நினைக்கிறீர்களா? என்ற கேள்விக்கு பொதுமக்கள் அளித்த பதில்களின் சதவீதம் முறையே,
நாடாளுமன்றத்திற்கு மட்டும் தனியாக தேர்தல் நடத்தலாம் என்பவர்கள் – 18.90%
நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தலாம் என்பவர்கள் – 24.32%
தற்போதைய நடைமுறையையே பின்பற்றலாம் என்பவர்கள் – 42.92%
பிறகருத்துக்களை முன்வைப்பவர்கள் – 4.11%
கூற இயலாது, தெரியாது என்பவர்கள் – 9.75%Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM