கவனம் ஈர்க்கும் செம்பி பட டிரைலர்
மைனா, கும்கி, கயல், தொடரி, காடன் ஆகிய படங்களை இயக்கியவர் பிரபு சாலமன். தற்போது அவர் கோவை சரளாவை முதன்மை கதாபாத்திரமாக வைத்து செம்பி என்ற பெயரில் ஒரு படத்தை இயக்கி இருக்கிறார். இதுவரை காமெடி ரோல்களில் நடித்து வந்துள்ள கோவை சரளா, இந்த படத்தில் முதன்முறையாக ஒரு சீரியஸான வேடத்தில் நடித்துள்ளார். அவருடன் தம்பி ராமையா, குக் வித் கோமாளி புகழ் அஸ்வின் உள்பட பலர் நடித்துள்ளார்கள். இந்த செம்பி படத்தின் டிரைலரை இயக்குனர் செல்வராகவன் வெளியிட்டுள்ளார். இந்த ட்ரைலரை பார்க்கும் போது மலைவாழ் மக்களையும், ஒரு பேருந்தையும் மையப்படுத்திய கதையில் உருவாக்கப்பட்டிருப்பதை தெரிந்து கொள்ள முடிகிறது. அதோடு பேருந்து விபத்து நடப்பது, காவல்துறை நடவடிக்கையில் இறங்குவது உள்ளிட்ட சில காட்சிகளை பார்க்கும்போது இப்படம் மைனா படத்தின் சாயலை வெளிப்படுத்துகிறது. இந்த டிரைலர் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை பெற்று வருகிறது.