ஸ்ரீநகர்:
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஆனந்தநாக் மாவட்டம் ராஜிப்புரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அவர்கள் அங்கு விரைந்து சென்றனர், அப்போது அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.
பாதுகாப்பு படையினரும் திருப்பி சுட்டனர். இதில் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பை சேர்ந்த நிஷார் காண்டே என்ற பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டார். இவர் அந்த அமைப்பின் தளபதியாக செயல்பட்டு வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.இந்த துப்பாக்கி சூட்டில் 3 போலீசார் படுகாம் அடைந்தனர். அவர்கள் ஆஸ்பத்திரியில் சிசிச்சைகாக சேர்க்கப்பட்டு உள்ளனர்.
சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதியிடம் இருந்து ஏ.கே. 47 துப்பாக்கி, மற்றும் பயங்கர ஆயுதங்களை போலீசார் கைப்பற்றினார்கள்.