குடிபோதையில் ரயில் பயணிகளிடம் ரகளை : 3 போலீஸ் உள்ளிட்ட ஐவர் கைது

விருத்தாச்சலம்

சென்னை – தூத்துக்குடி ரயிலில் குடிபோதையில் பயணிகளிடம் ரகளை செய்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று முன் தினம் இரவு 7.15 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து தூத்துக்குடிக்கு முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டது. அப்போது இந்த ரயிலில் பயணம் செய்த 5 பேர் குடிபோதையில் பயணிகளிடம் ரகளை செய்ததாக கூறப்படுகிறது. சக பயணிகள் விழுப்புரத்தில் ரயில் நின்றபோது டிக்கெட் பரிசோதகரிடம் புகார் செய்தனர்.

இதையொட்டி டிக்கெட் பரிசோதகர் திருச்சி ரயில்வே காவல் நிலையத்திற்கு தகவல் அளித்து அவர்கள் விருத்தாசலம் ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.  இரவு 11 மணி அளவில் முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில் விருத்தாசலம் ரயில்நிலையத்திற்கு வந்தபோது ரயில்வே  போலீசார், ரகளை செய்த 5 பேரையும் கீழே இறக்கி ரயில்வே காவல்நிலையத்திற்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது குடிபோதையில் பயணிகளிடம் ரகளை செய்த 5 பேரில் 3 பேர் போலீஸ்காரர்கள் என தெரியவந்தது. அவர்கள் சென்னை பெரம்பூரை சேர்ந்த தலைமை காவலர் மாணிக்கராஜ் (36), சென்னை ஆவடி கேம்ப்பில் காவலராக பணிபுரிந்து வரும் தலைமை காவலர் செந்தில்குமார் (41), திருவள்ளூர் சோலா நகரை சேர்ந்த இன்ஜினியர் பொன்னுசாமி (46), திருமுல்லைவாயல் பகுதியை சேர்ந்த இன்ஜினியர் முத்துக்குமார்(40),  என தெரிய வந்தது.

இந்த 5 பேரையும் விருத்தாசலம் ரயில்வே  போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.