தேடுபொறி என்றாலே உலகம் முழுவதும் உள்ள அனைவருக்கும் உடனே ஞாபகம் வருவது கூகுள் தேடுபொறி தான். அதன்பிறகு நினைவுபடுத்தி தான் மற்றதேடுபொறிகளை தேடவேண்டும்.
கூகுளைப் பயன்படுத்துவது போன்று மற்ற தேடுபொறி சேவைகளை பயன்படுத்த யாருமே விரும்புவதில்லை என்பதும், கூகுள் தான் பயனர்களுக்கு நண்பனாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
கூகுள் தேடுபொறிக்கு போட்டியாக ஒரு சில தேடுபொறி வந்தாலும் அவை கூகுள் அளவுக்கு செயல்பட முடியாததால் இந்தத் துறையில் தனிப்பட்ட முறையில் கூகுள் ஆதிக்கம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது.
23 வருடத்திற்கு பின் அமேசான் உயர் அதிகாரி வெளியேறினார்.. அதிர்ச்சியில் ஜெப் பெசோஸ்..!
தேடுபொறி
இந்த நிலையில் கூகுளுக்கு கடும் போட்டியை விளைவிக்கும் வகையில் ஆப்பிள் நிறுவனம் புதிதாக தேடுபொறி தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே ஆப்பிள் நிறுவனம் புதிய தேடுபொறி தொடங்கப் போவதாக கடந்த சில ஆண்டுகளாக கூறப்பட்டு வந்தது. அப்போதெல்லாம் அந்நிறுவனம் கிண்டலுக்கு உள்ளானது என்பதும் குறிப்பிடத்தக்கது.
2023 ஜனவரி
ஆனால் தற்போது இந்த தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அடுத்த ஆண்டு அதாவது 2023-ம் ஆண்டு ஜனவரியில் ஆப்பிள் நிறுவனத்தின் தேடுபொறி பயனர்களின் உபயோகத்திற்கு வரும் என்று கூறப்படுகிறது.
ஆப்பிள் தேடுபொறி
இதுகுறித்து ஆப்பிள் நிறுவனத்தின் தொழில்நுட்ப பதிவாளர் ராபர்ட் ஸ்கோப்பிள் கூறியபோது, ‘2023-ம் ஆண்டு ஆப்பிள் நிறுவனங்களின் குறிப்பிடத்தக்க அம்சங்களில் ஒன்றாக எங்களுடைய தேடுபொறி இருக்கும் என்றும் ஆப்பிள் அறிமுகம் செய்யும் தேடுபொறி பயனர்களுக்கு ஒரு வித்தியாசமான அனுபவமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஈடுகட்டுமா?
கூகுள் தேடுபொறி தற்போது உலகம் முழுவதும் பிரபலமடைந்துள்ள நிலையில் அதற்கு ஈடுகட்டும் வகையில் ஆப்பிள் தேடுபொறி இருக்குமா? அப்படியே இருந்தாலும் அது எந்த அளவுக்கு பயனர்களால் ஏற்றுக் கொள்ளப்படும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
சவால்
இருப்பினும் கூகுளுக்கு பல துறைகளில் சவால் கொடுத்து வரும் ஆப்பிள் நிறுவனம் ஒரு தேடுபொறியை வெளியிடுகிறது என்றால் அது கண்டிப்பாக கூகுளை விட அதிக தரத்தில் இருக்கும் என்று தொழில்நுட்ப வல்லுநர்கள் கூறுகின்றனர்.
Apple likely to launch its own search engine to take on Google
Apple likely to launch its own search engine to take on Google | கூகுளுக்கு போட்டியாக தேடுபொறி: ஆப்பிள் முயற்சி வெற்றி பெறுமா?