கோழிக்கோடு,
கேரளாவில் ஐந்தாவது நாளாக நேற்றும் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தை கடந்தது. அங்கு கடந்த நான்கு நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தை கடந்து வந்த நிலையில், நேற்றும் 1465 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டது. மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஆறு பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில், கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது குறித்து கவலைப்பட தேவையில்லை என்று கூறிய அம்மாநில சுகாதாரத்துறை மந்திரி, பொது இடங்களில் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் எனவும்,, அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
Related Tags :